

நாகர்கோவில்: தெற்கு கேரள சிஎஸ்ஐ மகா திருச்சபை தலைமையகத்துக்கு உட்பட்ட திருவனந்தபுரம் அருகே பாளையம் எம்எம் தேவாலயத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் ஆக்கிரமித்தது மற்றும் அங்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கேரள நீதிமன்ற தலையீட்டில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சபை பங்கு மக்களில் ஒருதரப்பிரனரின் எதிர்ப்பையும் மீறி, முன்னாள் ஆயர் தர்மராஜ் ரசாலம், தற்போதைய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன், அவரது ஆதரவாளர்கள், தேவாலய பூட்டை உடைத்து வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பிரவீன் எம்எல்ஏ உட்பட 16 பேர் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் நேற்று வழக்கு பதிந்தனர்.