விஜயவாடா கனக துர்கையம்மை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்

விஜயவாடா கனக துர்கையம்மை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
Updated on: 
1 min read

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் விஜய்க்கு, அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முதல்வர் விஜய் கனக துர்கையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 

தமிழக முதல்வர் விஜய் இன்று (அக்.13) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்துக்கு மாலை 4.30 மணியளவில் வந்தடைந்தார். அவரை ஆந்திர அரசு தரப்பில் நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் முதல்வர் விஜய் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கனக துர்கையம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மேள தாளங்களுடன் வரவேற்று அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.  

நவராத்திரி உற்சவத்தின் 3-ம் நாளில் கனக துர்கையம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்தார். அவரை தரிசித்த முதல்வர் விஜய்க்கு, வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர். கோயில் தரப்பில் முதல்வருக்கு அம்மனின் திருவுருவ படம், தீர்த்த, பிரசாதங்களையும் வழங்கி கவுரவித்தனர்.

முதல்வர் விஜய் வருகையை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் முன்கூட்டியே குவிந்திருந்தனர். அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய் வந்ததும் அவரை காண திரளான ரசிகர்கள் உற்சாகமாக கை அசைத்து ஆந்திராவுக்கு வரவேற்றனர். பின்னர் கோயில் வளாகத்திலும் ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர்.

விஜயவாடா கனக துர்கையம்மை கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா - கட்சிப் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in