முதல்வர் இன்று கன்னியாகுமரி வருகை

திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவை திறந்து வைக்கிறார்
கன்னியாகுமரியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு.

கன்னியாகுமரியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு.

Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திரு​வள்​ளுவர் வெள்​ளி​விழா நினைவு வளைவை திறந்து வைக்​கிறார்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக இன்று மதி​யம் கன்னியாகுமரி வரு​கிறார். மாலை​யில் கன்னியாகுமரியில் திரு​வள்​ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா நினைவு வளை​வைத் திறந்து வைக்​கிறார்.

பின்​னர் புத்​தளம் கல்​லடி​விளை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள முன்​னாள் முதல்​வர் கருணாநிதி சிலை, மு.க.ஸ்​டா​லின் படைப்​பகம் ஆகிய​வற்​றைத் திறந்துவைக்​கிறார்.

அதைத்​தொடர்ந்​து, நாகர்​கோ​வில் வேப்​பமூடு பூங்​கா​வில் ரூ.50 லட்​சம் மதிப்​பீட்​டில் அமைக்​கப்​பட்​டுள்ள பொன்​னப்ப நாடார் வெண்கல சிலையை திறந்​து​வைக்​கிறார்.

நாளை (பிப்​.25) காலை நாகர்​கோ​வில் கன்​கார்​டியா மேல்​நிலைப்​பள்ளி வளாகத்​தில் நடை​பெறும் அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில், 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். அதைத்​தொடர்ந்​து, நாகர்​கோ​வில் அநாதைமடம் மைதானத்​தில் அமைய​வுள்ள ஐ.டி பார்க் உட்பட புதிய திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், முடிவுற்ற பணி​களைத் திறந்​து​வைத்​தும் பேசுகிறார்.

முதல்​வர் வரு​கை​யையொட்​டி, கன்னியாகுமரி மாவட்​டத்​தில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. எஸ்​.பி.ஸ்​டா​லின் தலை​மை​யில் 2,500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்​டத்​தில் ட்ரோன்​கள் மற்​றும் ஆளில்லா வான்​வழி வாக​னங்​கள் பறக்க இன்​றும், நாளை​யும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

தடையை மீறி​னால் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் அழகுமீனா எச்​சரித்​துள்​ளார்​. கன்னியாகுமரியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு.

<div class="paragraphs"><p>கன்னியாகுமரியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு.</p></div>
ரியல் எஸ்​டேட் அதிபர் கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in