“பெண்ணுரிமைக்காக முழங்கும் கர்ஜனை மொழி” - கனிமொழிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

கனிமொழி| முதல்வர் ஸ்டாலின்

கனிமொழி| முதல்வர் ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, “கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கனிமொழிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜய் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கனிமொழி|&nbsp;முதல்வர் ஸ்டாலின்</p></div>
திடீர் குழப்பத்தில் திமுக கூட்டணி: எப்படி சமாளிக்கப் போகிறார் ஸ்டாலின்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in