கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு; தவெக வேட்பாளர் முன்னிலை

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர்ட் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கொளத்தூர் தொகுதியில் 4 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 16,692 வாக்குகளும், திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 14,141 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் 4958 வாக்குகளும், நாதகவின் சவுந்தரபாண்டியன் 1498 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் மு.க.ஸ்டாலின் 2,529 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் விஜய்யின் தவெக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 101 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 78 தொகுதிகளில், திமுக கூட்டணி 45 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்</p></div>
Tamil Nadu Election Results 2026 LIVE: பெரும்பான்மையை நெருங்கும் தவெக; 2-ம் இடத்தில் அதிமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in