மின்நுகர்வோர் குறை தீர்க்க முன்னுரிமை தர முதல்வர் அறிவுறுத்தல்

மின்நுகர்வோர் குறை தீர்க்க முன்னுரிமை தர முதல்வர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மின்சாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல் குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், மின்துறை செயலர் மங்கத் ராம் சர்மா, மின் வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர் மு.அ.சித்திக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண் டனர்.

இக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின்தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைமுறைக்கு வந்துள்ள 200 யூனிட் மின்சாரம் திட்டம் தொடர்பாகவும் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து, ‘‘விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம், மின்சார வாரியம் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சவால்கள் இருந்தாலும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட நுகர்வோர் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பன வழிகாட்டுதல்களை அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

தொழில் துறையினர் சந்திப்பு இதுதவிர, ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, ரெனால்ட் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் (இந்தியா) ஸ்டீபன் டெப்லேஸ், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவுன்சில் சேர்மன் ஜி.எஸ்.கே.வேலு, சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் சங்கர் போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வர் விஜய்யை, தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினர். அவர்களிடம் தொழில் முதலீடுகளை அதிகரிக்கவும், அதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

மின்நுகர்வோர் குறை தீர்க்க முன்னுரிமை தர முதல்வர் அறிவுறுத்தல்
​விசாரணையில் உள்ளவரை அமைச்சராக்கினால் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கப்படலாம்: அதிமுக எம்.பி இன்பதுரை கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in