​விசாரணையில் உள்ளவரை அமைச்சராக்கினால் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கப்படலாம்: அதிமுக எம்.பி இன்பதுரை கருத்து

​விசாரணையில் உள்ளவரை அமைச்சராக்கினால் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கப்படலாம்: அதிமுக எம்.பி இன்பதுரை கருத்து
Updated on
1 min read

சென்னை: ‘அதி​முக எம்​.பி இன்​பதுரை வெளி​யிட்​டுள்ள எக்​ஸ்​தளப் பதி​வில் கூறியிருப்பதாவது: கட்​சித் தாவல் தடை சட்ட புகாருக்கு ஆளாகிய ஒரு​வரை தகுதி நீக்​கம் செய்ய அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 10-வது அட்​ட​வணை பேர​வைத் தலை​வருக்கு அதி​காரம் வழங்​கு​கிறது.

அவ்​வாறு புகாருக்கு உள்​ளானவரை அமைச்​ச​ராக பதவிப்​பிர​மாணம் செய்து வைக்​கும் முன், சட்​டப்​பிரிவு 163-ன்​படி முதல்​வரிடம் விளக்​கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசி​யம்.

விசா​ரணை நிலு​வை​யில் உள்ள நிலை​யில் அதை எதிர்​கொள்​ளும் நபர் அமைச்​ச​ராக இருந்​தால் சட்​டப்​பிரிவு 142 வழங்​கும் சிறப்பு அதி​காரம் மூலம் உச்சநீதி​மன்​றம் அவரை பதவி நீக்​கம் செய்​ய​லாம்.

மணிப்​பூர் மாநில அமைச்​சர் தனாவோஜம் ஷ்யாம்​ கு​மார் சிங் வழக்​கில் 2020-ல் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதா​ரணம்.

எனவே, எல்லா நிலைகளி​லும் அரசி​யலமைப்​புச் சட்​டமே மேலோங்கி நிற்​கும். இது​தான் நமது அரசி​யலமைப்பு சட்​டத்​தின் சிறப்​பு. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

​விசாரணையில் உள்ளவரை அமைச்சராக்கினால் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கப்படலாம்: அதிமுக எம்.பி இன்பதுரை கருத்து
சி.வி.சண்முகம் தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு? - இபிஎஸ் தரப்பில் இன்று அவசர கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in