ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்த முதல்வர்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

Updated on
1 min read

சென்னை: பாஜக மூத்த தலை​வரும், தேசிய செயற்​குழு உறுப்​பினரு​மான ஹெச்​.​ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்​னை​யில் நடந்த தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்சி பங்​கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்​தார்.

உடனடியாக அரு​கில் உள்ள தனி​யார் மருத்​துவமனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக அப்​போலோ மருத்​துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அவருக்கு பக்​க​வாத பாதிப்பு ஏற்​பட்​டது பரிசோதனை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்​பட்டு வரு​கிறது. குடும்​பத்​தினர், நண்​பர்களுடன் பேசக்​கூடிய வகை​யில் அவர் நலமுடன் இருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மருத்​து​வ​மனைக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டா​லின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஹெச்​.​ராஜா​வின் உடல்​நலம் குறித்து அவரது குடும்​பத்​தினரிடம் கேட்​டறிந்தார்.

அப்​போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் உடன் இருந்​தார். தொடர்ந்​து, அதே மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் குளித்​தலை திமுக எம்​எல்ஏ ஆர்​.​மாணிக்​கத்தையும் சந்​தித்து உடல்​நலம் குறித்து முதல்வர் கேட்​டறிந்​தார்​.

<div class="paragraphs"><p>சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.</p></div>
அமலாக்கத் துறை நடவடிக்கை கோரியவருக்கு நீதிமன்றம் அபராதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in