நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
Updated on
2 min read

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​ கண்​ணு, தனது 101-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். இதையொட்டி தி.நகர் பாலன் இல்​லத்​தில் அவரது பிறந்தநாள் விழா, கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இவ்​விழா​வில் வெளி​யிடப்​பட்ட ஜனசக்தி நூற்​றாண்டு சிறப்பு மலர், ஜனசக்தி நாள்​காட்​டியை, நல்​ல​கண்​ணு​வின் மூத்த புதல்​வி, ஓய்​வு​பெற்ற தலைமை ஆசிரியர் காசி​பாரதி பெற்​றுக் கொண்​டார்.

முன்​ன​தாக நந்​தனத்​தில் உள்ள வீட்​டில் நல்​ல​கண்​ணுவை, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று சந்​தித்து நலம் விசா​ரித்​து, பிறந்தநாள் வாழ்த்து தெரி​வித்​தார். இந்​நிலை​யில் முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​களும் வெளியிட்ட வாழ்த்து செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: விடு​தலைப் போராட்ட வீர​ராக​வும், விவ​சா​யத் தொழிலா​ளர்​களுக்​கான போராளி​யாக​வும் திகழ்ந்​து, இன்​றள​வும் நமக்கு வழி​காட்​டும் நூற்​றாண்டு நாயகர், முதுபெரும் தலை​வர் நல்​லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்​துகள். தன்​னலம் கருதா உழைப்​புக்கு வாழும் சாட்​சி​யான, எண்​ணற்ற இளைஞர்​களுக்கு எடுத்​துக்​காட்​டான நல்​ல​கண்​ணு, நல்ல உடல்​நலத்​துடன் நீண்​ட​நாட்​கள் நிறை​வாழ்வு வாழ்ந்​திட விழைகிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: நூற்​றாண்​டைக் கடந்து ஞானம், நேர்​மை, மனிதநே​யம் இந்த மூன்​றின் அடை​யாள​மாக, பல தலை​முறை​களுக்கு வழி​காட்​டி​யாக திகழும் நல்​ல​கண்​ணுவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்​துகள்.

மதி​முக பொதுச் ​செய​லா​ளர் வைகோ: இந்​திய விடு​தலைப் போராட்​டம், விவ​சா​யிகள், தொழிலா​ளர்​களுக்​கான போராட்​டம் என அவர் கண்ட களங்​கள் பல. அடக்​கு​முறை​களுக்கு அஞ்​சாமல் இன்​றைக்​கும் போராடி கொண்​டிருக்​கும் நல்​ல​கண்ணு நல்ல உடல்​நலத்​துடன் நீண்டகாலம் வாழ்ந்து தமிழகத்துக்கு வழி​காட்ட வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: ஆயிரம் பிறை​கண்ட ஆளுமை நல்​ல​கண்​ணு. தமிழினத்​தின் பெரு​மைக்​கான அடை​யாளம். அவர் வாழும் காலத்​தில் வாழ்​கிறோம் என்​பதே நமக்கு பெரு​மை.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: விடு​தலைப் போராட்ட வீர​ராக தன் இளம் வயதை சிறைச்​சாலை​யில் கழித்​து, ஏழை எளிய மக்​களுக்​காக குரல் கொடுத்து தொடர்ந்து பாடு​பட்டு வரும் மூத்த தலை​வர் நல்​ல ​கண்​ணுவை என்​றும் நலமுடன் வாழ வாழ்த்​துகிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி: நல்​லக்​கண்ணு இன்​னும் பல்​லாண்டு நல்ல உடல்​நலத்​துடன் வாழ்ந்து அடுத்​தடுத்த தலை​முறை​களுக்கு வழி​காட்ட வாழ்த்​துகிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: இந்​திய நாட்டின் விடு​தலைக்​காக, விவ​சா​யிகளுக்கு ஆதர​வாக, தீண்​டா​மை கொடுமைக்கு எதி​ராக என தன் வாழ்​நாளின் பெரும் பகு​தியை சிறை​யிலேயே கழித்த அப்​பழுக்​கற்ற அரசி​யல்​வாதி நல்​ல​கண்​ணு, நீண்ட ஆயுளோடு மக்​கள் பணி​யைத் தொடர இறைவனை பிரார்த்​திக்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: மக்​களின் உயர்​வுக்​கும், மேம்​பாட்​டுக்​கும் தன் வாழ்வை ஒப்​பு​வித்த இந்​நூற்​றாண்​டின் ஈடுஇணை​யற்ற மக்​கள் போ​ராளி நல்​லக்​கண்​ணு​வின் பிறந்த நாளில்​ அவரைப்​ போற்​றி வணங்​கு​கிறேன்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
தவெக கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in