

கும்பகோணம்: நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் சர்மா நவ. 24-ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் நேற்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்த வந்தார்.
கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதையுடன் நீதிபதியை வரவேற்றனர். தொடர்ந்து, யானை மங்களத்துக்கு நீதிபதி சூர்யகாந்த் சர்மா பழங்கள் வழங்கி ஆசி பெற்றார். பின்னர், ஆதி கும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அம்மன் சந்நிதிகளில் அவர் வழிபட்டார்.
முன்னதாக, நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயில், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில், வேங்கடாஜலபதி சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தலைமை நீதிபதி சூரியகாந்த் சர்மா வழிபட்டார்.