ஹெலிகாப்டர் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்: தலைமைத்​ தேர்தல் அதிகாரி தகவல்

ஹெலிகாப்டர் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்: தலைமைத்​ தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
1 min read

சென்​னை: ஹெலி​காப்டர் மற்​றும் ஹெலிபேட் அனு​மதி உள்பட 13 அனு​ம​திகளுக்கு சுவிதா இணை​யதளம் மூல​மாக 48 மணி நேரத்​துக்கு முன்​பாக விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக தலை​மைத்​தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, அரசி​யல் கட்​சிகள் மற்​றும் வேட்​பாளர்​கள் பின்​வரும் அனு​ம​தி​களுக்​காக விண்​ணப்​பிக்​கும் போது, சுவி​தா( Suvidha) என்ற இணை​யதளம் மூல​மாக மட்​டுமே சமர்ப்​பிக்க வேண்​டும்.

இத்​தகைய விண்​ணப்​பங்​கள் சம்​பந்​தப்​பட்ட சட்​டபேர​வைத் தொகு​தி​யின் தேர்​தல் நடத்​தும் அலு​வலர் அலு​வல​கத்​தில் 24 மணி நேரத்​துக்​குள் பரிசீலனை செய்​யப்​பட்டு தீர்வு காணப்​படும்.

இது தொடர்​பாக, அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் பதிவு செய்​யப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்​சிகள், வேட்​பாளர்​கள் மற்​றும் அவர்​களின் பிர​தி​நி​தி​கள் தகு​தி​யுள்ள அதி​காரி​களிடம் ஒப்​புதல் பெறு​வதற்​காக, நிர்​ண​யிக்​கப்​பட்ட காலக்​கெடு​வுக்​குள் சுவிதா இணை​யதளம் வழி​யாக பின்​வரும் அனு​ம​தி​களுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

ஹெலி​காப்​டர் மற்​றும் ஹெலிபேட் (தரை​யிறங்கு தளம்) பயன்​படுத்​து​வதற்​கான அனு​ம​தி, தற்​காலிக கட்சி அலு​வல​கம் திறப்​பு, ஒலிபெருக்​கி​யுடன் கூடிய கூட்​டம் நடத்​து​வதற்​கான அனு​ம​தி, ஒலிபெருக்கி இல்​லாத கூட்​டம் நடத்​து​வதற்​கான அனு​ம​தி, ஒலிபெருக்​கி​யுடன் தெரு​முனை கூட்​டம் நடத்​து​வதற்​கான அனு​ம​தி, ஒலிபெருக்​கி​யுடன் ஊர்​வலம் நடத்​து​வதற்​கான அனு​ம​தி, பேரணி நடத்​து​வதற்​கான அனு​ம​தி, வீதி உலா (ரோடு ஷோ) நடத்​து​வதற்​கான அனு​ம​தி, சுவரொட்​டிகள், விளம்​பரப் பலகைகள் மற்​றும் ஒற்றை தூண் விளம்​பரப் பலகை காட்​சிப்​படுத்​து​வதற்​கான அனு​ம​தி, வாகன அனு​ம​தி, ஒலிபெருக்​கி​யுடன் கூடிய வாகன அனு​ம​தி, மேடை தடுப்​பு​கள் அமைப்​ப​தற்​கான அனு​மதி ஆகிய​வற்​றுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

அனு​மதி கோரும் அரசி​யல் கட்​சி, வேட்​பாளர், நிகழ்வு நடப்​ப​தற்கு குறைந்​தது 48 மணி நேரத்​துக்​கு​முன்​ன​தாக, தேர்​தல் செல​வினக் கண்​காணிப்பு குறித்த சமீபத்​திய அறி​வுறுத்​தல்​களின் தொகுப்​பில் கொடுக்​கப்​பட்​டுள்ள ‘இணைப்பு – டி1’ படிவத்​தில், செல​வினத் திட்ட விவரங்​களு​டன் சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் நடத்​தும் அலு​வலர் அலு​வல​கத்​தி​லுள்ள அனு​மதி பிரிவுக்கு பொறுப்​பான அலு​வலரிடம் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

விண்​ணப்​பங்​களை தகு​தி​யுள்ள அதி​காரி​கள் குறித்த நேரத்​தில் சீராக பரிசீலனை செய்ய ஏது​வாக (முன்​மொழியப்​பட்ட) செயல்​பாடு​களின் தேதி, இடம் மற்​றும் நேரம் உள்​ளிட்ட அனைத்​துத் தகவல்​களும் முழு​மை​யாக​வும், சரி​யாக​வும் இருப்​பதை அரசி​யல் கட்​சிகளும் வேட்​பாளர்​களும் உறுதி செய்ய வேண்​டும்.

சுவிதா இணை​யதளத்தை suvidha.eci.gov.in என்ற முகவரி​யில் அணுகலாம். ஏதேனும் சந்​தேகங்​கள் இருந்​​தால்​, அரசி​யல்​ கட்​சிகள்​ உதவிக்​​காக அந்​தந்​த மாவட்​ட தேர்​தல்​ அலு​வலர்​, தேர்​தல்​ நடத்​தும்​ அலு​வலரைத்​ தொடர்​பு கொள்​ளலாம்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

ஹெலிகாப்டர் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்: தலைமைத்​ தேர்தல் அதிகாரி தகவல்
வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in