இவிஎம்-ல் வேட்பாளர் பெயர், சின்னம் பதிவேற்றம் ஏப். 16ல் தொடக்கம்: அர்ச்சனா பட்நாயக்

இவிஎம்-ல் வேட்பாளர் பெயர், சின்னம் பதிவேற்றம் ஏப். 16ல் தொடக்கம்: அர்ச்சனா பட்நாயக்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சின்னங்களை பதிவேற்றும் பணி நாளை மறுநாள் (ஏப். 16) தொடங்க உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை ஏற்பாட்டு முறை (EMS) வாயிலாக வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVMs) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை(VVPATs) ஒதுக்கீடு செய்வதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக EVMs மற்றும் VVPATs-கள் இரண்டாம் நிலை சமவாய்ப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த பணி 11.04.2026 முதல் 16.04.2026 வரை நடைபெறும். மேலும், வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றமானது 16.04.2026 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் செயல்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் / அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும்.

வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட EVMs மற்றும் VVPATs-கள் மற்றும் இருப்புக்காப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.

இந்த EVMs மற்றும் VVPATs-கள் மட்டுமே, வாக்குப்பதிவு நாளன்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

இவிஎம்-ல் வேட்பாளர் பெயர், சின்னம் பதிவேற்றம் ஏப். 16ல் தொடக்கம்: அர்ச்சனா பட்நாயக்
"தமிழகத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி பெறும்": கிரிஷ் சோடங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in