சென்னை வந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர்: அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை

தேர்தலை வெளிப்படையாக நடத்துவது பற்றி கருத்து கேட்கிறார்
தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார்

தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார்

Updated on
1 min read

சென்னை: இந்​திய தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் நேற்று சென்னை வந்​தார். அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிரதி​நி​தி​களை தனித் தனியாகச் சந்​தித்​து, தேர்​தலை வெளிப்​படைத்தன்​மை​யுடன் நடத்​து​வது குறித்து இன்று கருத்து கேட்கிறார்.

தமிழகம், கேரளம், அசாம், மேற்​கு​வங்க மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மார்ச் 2-வது வாரத்​தில் அறிவிக்கவாய்ப்​புள்​ளது. இத்​தேர்​தலுக்கு இந்​திய தேர்​தல் ஆணை​யம் தயா​ராகி வரு​கிறது. ஏற்​கெனவே 1,444 அதி​காரி​கள், 714 பொது பார்​வை​யாளர்​கள், 233 காவல் பார்​வை​யாளர்​கள், 497 செல​வின பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டு உரிய பயிற்​சி வழங்​கப்​பட்​டுள்​ளன.

ஏற்​கெனவே கடந்த பிப்​.13, 14 தேதி​களில் தமிழகம் வந்த தேர்தல் ஆணை​யக் குழு அதி​காரி​கள் மாவட்ட ஆட்​சி​யர்​கள், எஸ்​பிக்​கள், ஐஜி-க்​கள், வரு​மான வரி, அமலாக்​கத் துறை, சுங்​கத்​துறை அதி​காரி​கள், ராணுவ அதிகாரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினர். அதனைத் தொடர்ந்து தமிழகத்​தில் நடை​பெற்ற எஸ்​ஐஆர் பணி​களின் நிறை​வாக கடந்த பிப்​.23-ம் தேதி இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் 5.67 வாக்​காளர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர். 74 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டனர்.

இதன் தொடர்ச்​சி​யாக தேர்​தலுக்​கான முன்​னேற்​பாடு​கள் தொடர்​பாக ஆலோ​சிப்​ப​தற்​காக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் தலை​மையி​லான 7 பேர் கொண்ட அதி​காரி​கள் குழு நேற்று சென்னை வந்​தது. இக்​குழு நேற்று புதுச்​சேரி சென்று அங்கு நடை​பெறும் தேர்​தல் முன்​னேற்​பாடு​களை ஆய்வு செய்​தது.

அதனைத் தொடர்ந்து இன்று சென்னை வரும் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார், அங்​கீகரிக்​கப்​பட்ட அரசியல் கட்சி பிர​தி​நி​தி​களு​டன் ஆலோ​சனை நடத்​துகிறார். அப்​போது தேர்தலை நேர்மை​யுடன், வெளிப்​படைத் தன்​மை​யுடன் நடத்​து​வதற்​கான அரசி​யல் கட்​சிகளின் ஆலோ​சனை​களை பெறுகிறார்.

ஒவ்​வொரு அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களையும் தனித்​தனியே சந்​தித்து ஆலோ​சனை பெற திட்​ட​மிட்​டிருப்​ப​தாதக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. அதனைத் தொடர்ந்​து, நாளை (பிப்​.27) மாவட்ட ஆட்​சி​யர்​கள், எஸ்​பி-க்​கள், ஐஜி-க்​களு​டன் ஆலோ​சனை நடத்​துகின்​றனர். அப்​போது, வாக்​குச்​சாவடி மைய ஏற்​பாடு​கள், தேவை​யான பணி​யாளர்​கள், அவர்​களுக்கு வழங்க உள்ள தேர்​தல் பயிற்சிகள், வாக்கு எண்​ணிக்கை மைய ஏற்பாடு​கள், தேர்​தல் பாதுகாப்பு, தேர்​தல் நடத்தை விதி​களை அமல்​படுத்த தேவை​யான காவல்​துறை​யினர் உள்​ளன​ரா, பதட்​ட​மான, மிக​வும் பதட்​ட​மான வாக்​குச்​சாவடிகள், பண விநி​யோகத்தை தடுக்​க​வும், டிஜிட்​டல் பரிவர்த்​தனையை கண்​காணிப்பற்கான திட்​டங்கள் குறித்​தும் ஆலோ​சிக்க உள்​ளனர்.

இந்த ஆலோ​சனைக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணை​யர் ​ செய்​தி​யாளர்​களை​யும்​ சந்​திக்​க உள்​ளார்​.

<div class="paragraphs"><p>தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார்</p></div>
மாற்றுத் திறனாளிகளுக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: 40 சதவீத​மாக நிர்ணயித்து அரசாணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in