

சென்னை: கரூர் வழியாக சென்னை- போடிநாயக்கனூர்- சென்னை இடையே இதுவரை வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில், நாளை (மார்ச் 19) முதல் வாரத்துக்கு 6 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் விரைவு ரயில் (20601) வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும், போடிநாயக்கனூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (20602) வாரந்தோறும் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களிலும் இயக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ரயில்கள் இனி வாரத்தோறும் சனிக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை சேலம் அதிகாலை 2.55 மணி, நாமக்கல் 3.54 மணி, கரூர் 4.33 மணி, திண்டுக்கல் 5.47 மணி, போடிநாயக்கனூர் 8.50 மணிக்குச் சென்றடையும்.
இதேபோல, போடிநாயக்கனூரில் இருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு திண்டுக்கல் இரவு 11.42, கரூர் மறுநாள் அதிகாலை 12.48, நாமக்கல் அதிகாலை 1.19, சேலம் அதிகாலை 2.20, சென்னை காலை 7.55 மணிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.