போர் பீரங்கி, கப்பல் மாதிரிகளுடன் புதுப்பொலிவு பெற்ற சென்னை போர் நினைவுச் சின்னம்

ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றம்
இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும் தியாகங்களையும் போற்றும் வகையில் ராணுவ பாரம்பரிய வளாகமாக புதுப்பொலிவு பெற்றுள்ள சென்னை போர் நினைவுச் சின்னம்.

இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும் தியாகங்களையும் போற்றும் வகையில் ராணுவ பாரம்பரிய வளாகமாக புதுப்பொலிவு பெற்றுள்ள சென்னை போர் நினைவுச் சின்னம்.

Updated on
2 min read

சென்னை: ​போர் பீரங்​கி, கப்​பல் மாதிரி​களு​டன் சென்னை போர் நினைவுச் சின்​னம், நாட்​டின் வீரம் மற்​றும் தியாகத்தை பறை​சாற்​றும் ராணுவ பாரம்​பரிய வளாகமாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

சென்னை மெரினா கடற்​கரைக்​கும், வரலாற்றுச் சிறப்பு பெற்ற புனித ஜார்ஜ் கோட்​டைக்​கும் இடையே அமைந்​துள்ள போர் நினை​வுச் சின்​னம் முதல் மற்​றும் 2-ம் உலகப் போர்​களில் வீரமரணமடைந்த சென்னை மாகாண வீரர்​களின் நினை​வாக எழுப்​பப்​பட்​டது. காலப்​போக்​கில், சுதந்​திரத்​துக்கு பிந்​தைய அனைத்து போர்​கள் மற்​றும் ராணுவ நடவடிக்​கை​களில் பங்​கேற்று வீரமரணமடைந்த முப்​படை வீரர்​களை கவுரவிக்​கும் தேசிய நினை​வுச் சின்​ன​மாக இது பரிணமித்​துள்​ளது.

இந்​நினை​வுச் சின்​னம், தற்​போது, இந்​திய முப்​படைகளின் வரலாற்று வெற்​றிகளை​யும், தியாகங்​களை​யும் போற்​றும் நாட்​டின் முன்​னணி ராணுவ பாரம்​பரிய மைய​மாக விரிவுபடுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​திய படைகளின் வீரம், தியாகம் மற்​றும் சேவையை நினைவு கூரும் வகை​யில் பல்​வேறு சிறப்புப் படைப்​பு​கள் இங்கு நிறு​வப்​பட்டு வரு​கின்​றன. இந்​திய ராணுவத்​தின் தக்​ஷின் பாரத் பகுதி தலை​மையகம், தமிழக அரசு மற்​றும் சென்னை மாநக​ராட்​சி​யின் ஒருங்​கிணைந்த ஒத்​துழைப்​புடன் இந்த மேம்​பாட்டு பணி​களை மேற்​கொண்​டுள்​ளது.

வளாகத்தில் இடம்பெற்றுள்ள ‘டி-55’ ரக போர் பீரங்கி.

வளாகத்தில் இடம்பெற்றுள்ள ‘டி-55’ ரக போர் பீரங்கி.

முதல்​கட்​ட​மாக, இந்​திய ராணுவத்​தில் நீண்​ட​கால சேவைக்கு பின் ஓய்வு பெற்ற ‘டி-55’ ரக போர் பீரங்கி பிரத்​யேக மேடை​யில் நிறு​வப்​பட்​டுள்​ளது. இத்​துடன், நாட்​டின் முதல் உள்​நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்​பலான ‘ஐ.என்​.எஸ். விக்​ராந்த்’, சென்னை காட்​டுப்​பள்​ளி​யில் கட்​டப்​பட்ட ‘ஐ.என்​.எஸ். அஞ்​சதீப்’ ஆகிய​வற்​றின் மாதிரி​களும் இங்கு பொது​மக்​கள் பார்​வைக்​காக காட்சிப்படுத்​தப்​பட்​டுள்​ளன.

அடுத்​து, இந்​திய வான்​படை​யின் பெரு​மையை பறை​சாற்​றும் மிக முக்​கிய போர் விமான​மான ‘மிக்​-21’ மற்​றும் இந்​திய கடலோர காவல்​படை​யின் ரோந்து ஊர்​தி​களின் மாதிரி​களும் விரை​வில் நிறு​வப்பட உள்​ளன.

இதற்​கிடையே, பொது​மக்​கள், மாணவர்​கள் மற்​றும் சுற்​றுலா பயணி​களிடையே தேசபக்​தி​யை​யும், ராணுவத்தை பற்​றிய விழிப்​புணர்​வை​யும் ஏற்​படுத்​தும் வகை​யில், சிறப்பு ‘ஒளி மற்​றும் ஒலிக் காட்​சி’ நிகழ்ச்​சி​யும் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

போர் நினைவுச் சின்ன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ‘ஐ.என்.எஸ். அஞ்சதீப்’ போர்க்கப்பல் மாதிரிகள்.

போர் நினைவுச் சின்ன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ‘ஐ.என்.எஸ். அஞ்சதீப்’ போர்க்கப்பல் மாதிரிகள்.

தற்​சம​யம், ஆங்​கிலம் மற்​றும் இந்​தி​யில் வழங்​கப்​படும் இந்​நிகழ்ச்​சிக்​கு, விரை​வில் தமிழ் மற்​றும் ஆங்​கில துணைத் தலைப்​பு​களும் சேர்க்​கப்பட உள்​ளன. இந்த நினை​வுச் சின்​னம் குறிப்​பிட்ட நாட்​களில் பொது​மக்​கள், மாணவர்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​கள் பார்​வை​யிட திறக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏற்​க​னவே, மெரினா கடற்​கரை​யின் இரு இடங்​களில் 1965 இந்​திய - பாகிஸ்​தான் போரில் ‘அசல் உத்​தர்’ போர்க் களத்​தில் பாகிஸ்​தானின் பீரங்​கி​களை அழித்து வெற்றி தேடித் தந்த பிரிட்​டிஷ் தயாரிப்​பான ‘சென்​சுரியன்’ என்ற பீரங்​கி​யும்​ காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும் தியாகங்களையும் போற்றும் வகையில் ராணுவ பாரம்பரிய வளாகமாக புதுப்பொலிவு பெற்றுள்ள சென்னை போர் நினைவுச் சின்னம்.

நாடு முழுவதும் சிஜேபி போராட்டம் எதிரொலி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் விலகல் - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in