சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு

சிக்னல் கோளாறு காரணம் என தகவல்
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
Updated on
2 min read

சென்னை: சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த 1930-களில் தொடங்கியது. வணிக ரீதியாக சென்னையை இணைக்கும் நோக்கில் இந்த ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது.

தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடம், கடற்கரை - வேளச்சேரி, கடற்கரை - கும்மிடிப்பூண்டி, கடற்கரை - அரக்கோணம் என நான்கு தடங்களில் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லபவர்கள் என அனைவரும் பயணிக்கின்றனர்.

புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: இந்த சூழலில் சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, நடைமேடை 10 மற்​றும் 11-ல் இருந்து இயக்கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​கள் வரும் 20-ம் தேதி நள்​ளிரவு முதல் ஏப்​. 5-ம் தேதி நள்​ளிரவு வரை நடைமேடை 5 மற்​றும் 6-ல் இருந்து இயக்​கப்​படும் என தெற்கு ரயில்வே (சென்னை கோட்டம்) அறிவித்தது.

சென்னை கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் மற்​றும் செங்கல்பட்டுக்கு இயக்​கப்​படும் புறநகர் மின்​சார விரைவு ரயில்​கள் 6-வது நடைமேடை​யிலும், செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்கரை வரை இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் 5-வது நடைமேடை​யிலும் இயக்​கப்​படும். இந்த 45 நாட்​களி​லும் தற்​காலிக அட்​ட​வணைப்​படி மட்​டுமே மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும்.

புதிய எண்​கள் மற்​றும் கால அட்​ட​வணை​யுடன் 160 மின்​சார ரயில்கள் இயக்​கப்​படும். 80 ரயில்​கள் சென்னை கடற்​கரை​யில் இருந்​தும், 80 ரயில்கள் செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்​தும் இரு மார்க்​க​மும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

புறநகர் மின்​சார ரயில் சேவை​களின் புதிய அட்​ட​வணை​யின்​படி, தற்​போது இயக்​கப்​படும் 204 ரயில் சேவை​களுக்​குப் பதிலாக மொத்தம் 160 ரயில் சேவை​கள் இரு​மார்க்​க​மாக இயக்​கப்​படும். செங்​கல்​பட்டு மற்​றும் தாம்​பரம் முதல் கடற்​கரை வரை மொத்​தம் 67 ரயில் சேவை​கள் இயக்​கப்​படும்.

எழும்​பூர் நிலை​யத்​திலேயே 11 ரயில் சேவை​கள்​ நிறுத்​தப்​படும்​ என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புறநகர்​ சேவை​கள்​ குறைக்கப்பட்​டதால்​ பயணிகளுக்கு உதவும் வகையில் தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்தது.

ரயில் சேவை பாதிப்பு: இந்த சூழலில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட முதல் நாளன்றே கடற்கரை - தாம்பரம் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல். இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
நெதர்லாந்தை 17 ரன்களில் வென்றது இந்தியா: ஷிவம் துபே அபாரம்! - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in