ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: ர​யில்​கள் மீது கல்வீசும் நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, சென்னை ரயில்வே கோட்​டம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில், ஓடும் ரயில்​கள் மீது கல்வீசும் சம்​பவங்​கள் கண்​டறியப்​பட்​டுள்ள நிலை​யில், இத்​தகைய சட்​ட​விரோத செயல்​கள் பயணி​களின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்​களுக்கு ஆபத்​தை​யும், பொதுச் சொத்​துகளுக்கு சேதத்​தை​யும், ரயில் சேவை​யில் இடையூறுகளை​யும் ஏற்​படுத்​துகின்​றன.

ரயில்​கள் மீது கல்வீசுவது ஒரு கடுமை​யான குற்​ற​மாகும். ஓடும் ரயி​லின் மீது வீசப்​படும் கற்​கள் ஜன்​னல் கண்​ணாடிகளை உடைத்​து, உள்ளே இருக்​கும் பயணி​கள், குழந்​தைகள் மற்​றும் முதி​ய​வர்​களுக்​குப் பெரிய காயங்​களை​யும், நிரந்தர உடல் பாதிப்​பு​களை​யும் ஏற்​படுத்​தக் கூடும்.

மேலும், இத்​தகைய சம்​பவங்​கள் பயணி​களிடையே தேவையற்ற அச்​சத்​தை​யும், மன உளைச்​சலை​யும் உண்​டாக்​கு​கின்​றன. ரயில்வே சட்​டம், 1989-ன் கீழ் ரயில்​கள் மீது கல்வீசுவது தண்​டனைக்​குரிய குற்​ற​மாகும்.

ரயில் தண்​ட​வாளங்​களுக்கு அருகே வசிக்​கும் பெற்​றோர், ஆசிரியர்​கள் மற்​றும் சமூக ஆர்​வலர்​கள், இத்​தகைய செயல்​களால் ஏற்​படும் விளைவு​கள் குறித்து சிறு​வர்​களுக்​கும், இளைஞர்​களுக்​கும் விழிப்​புணர்வு ஏற்​படுத்தி அறி​வுரை வழங்க வேண்​டும். இத்​தகைய அசம்​பா​விதங்​களைத் தடுக்க சமூகத்​தின் பங்​களிப்பு மிக​வும் அவசி​ய​மாகும்.

ரயில் தண்​ட​வாளங்​களுக்கு அருகே சந்​தேகத்​துக்​கிட​மான செயல்​கள் ஏதேனும் நடந்​தால், பொது​மக்​கள், பயணி​கள் உடனடி​யாக ரயில்வே உதவி எண் 139-க்​குத் தகவல் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை
​சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in