ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- மும்பைக்கு சிறப்பு ரயில்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- மும்பைக்கு சிறப்பு ரயில்
Updated on: 
1 min read

சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி, சத் பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னை- மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன் விவரம்: மும்பை சி.எஸ்.எம்.டி-யில் இருந்து அக். 14, 21, 28, நவ.4, 11, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.35 மணிக்கு சிறப்பு ரயில் (01015) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து அக்.15, 22, 29, நவ.5, 12, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.00 மணிக்கு சிறப்பு ரயில் (01016) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டி-ஐ அடையும்.

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் திருவனந்தபுரத்துக்கு அக். 15, 22, 29, நவ.5, 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (01463) இயக்கப்படவுள்ளது. இதுபோல, மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு லோக்மான்ய திலக் டெர்மினஸுக்கு அக்.17, 24, 31, நவ.7, 14, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (01464) இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (செப்.28) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- மும்பைக்கு சிறப்பு ரயில்
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி தினமும் ரூ.50 வழங்க அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in