சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது

வடபழனி - பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

வடபழனி - பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

Updated on: 
1 min read

சென்னை: சென்​னை​யில் ரூ.4,900 கோடி மதிப்​பிலான பூந்​தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தனர்.

தமிழகத்​தில் பல்​வேறு நலத்​திட்​டங்​களை தொடங்கி வைக்க சென்​னைக்கு பிரதமர் மோடி சிறப்பு விமானத்​தில் நேற்று காலை 11 மணிக்கு வந்​தார். விமான நிலை​யத்​தில் ஆளுநர் அர்​லேகர், முதல்​வர் விஜய், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்​றனர்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாஜக மூத்த தலை​வர்​கள் தமிழிசை சவுந்​தர​ராஜன், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம் உட்பட பலரும் பிரதமரை வரவேற்​றனர்.

பின்​னர், புதிய மெட்ரோ ரயில் திட்​டத்தை தொடங்கி வைப்​ப​தற்​காக போரூர் மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு பிரதமர், காரில் சென்​றார். விமான நிலை​யம் தொடங்​கி, பரங்​கிமலை ராணுவ மைதானம் வரை ‘ரோடு ஷோ’ சென்ற மோடிக்கு வழிநெடு​கிலும் கலை நிகழ்ச்​சிகள், மேள தாளங்​களு​டன் பாஜக​வினர், பொது​மக்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் வடபழனி - பூந்​தமல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்​வர் விஜய் ஆகியோர் இணைந்து நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தனர். முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்ற பிறகு பிரதமருடன் பங்​கேற்​கும் முதல் அரசு நிகழ்ச்சி இது​வாகும். ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு, டிக்​கெட் கவுன்ட்​டரில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பிரதமர் மோடி டிக்​கெட் எடுத்​தார்.

தொடர்ந்​து, போரூரில் இருந்து பூந்​தமல்லி வரை மெட்ரோ ரயி​லில் பிரதமர் மோடி, முதல்​வர் விஜய் ஒன்​றாகப் பயணித்து மீண்​டும் போரூர் திரும்​பினர். அப்​போது, மெட்ரோ ரயில் திட்​டம், பயணி​கள் சேவை குறித்து அதி​காரி​களிடம் பிரதமர் கேட்​டறிந்​தார். சென்னை மெட்ரோ ரயில் திட்​டத்​தின் வழித்​தடங்​கள், எதிர்​கால திட்​டங்​கள் குறித்து மெட்ரோ ரயில் நிலைய மேலாண்மை இயக்​குநர் ஆஷிஷ் சாட்​டர்​ஜி, பிரதமரிடம் விளக்​கிக் கூறி​னார்.

பூந்​தமல்லி பைபாஸ் - வடபழனி வரை 15 கி.மீ. தொலை​வுக்கு உயர்​மட்ட மெட்ரோ ரயில் வழித்​தடம் சுமார் ரூ.4,900 கோடி மதிப்​பில் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மஞ்​சள் வழித்​தடத்​தில் பூந்​தமல்லி பைபாஸ், பூந்​தமல்லி பேருந்து நிலை​யம், பூந்​தமல்லி அரசு மருத்​து​வ​மனை, கரை​யான்​சாவடி, குமணன்​சாவடி, காட்​டுப்​பாக்​கம், அய்​யப்​பன்​தாங்​கல், தெள்​ளி​யாரகரம், போரூர் புறவழிச் சாலை, போரூர் சந்​திப்​பு, வடபழனி ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் உள்​ளன. இத்​தடத்​தில் பயணி​கள் சேவை நேற்றே தொடங்​கியது. இதையடுத்து பயணிகள் நேற்று மாலை மெட்ரோ ரயிலில் உற்சாகமாக பயணித்தனர்.

<div class="paragraphs"><p>வடபழனி - பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.</p></div>
‘கல்வி நிதி ரூ.5,110 கோடியை விடுவிக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in