சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

பொதுமக்கள் எதிர்ப்பால் நடவடிக்கை
சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பொது​மக்​கள் எதிர்ப்​பால் துல்​லிய சொத்து வரி மதிப்​பீட்டை நிறுத்தி வைப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் அறி​வித்​துள்​ளார்.

சென்னை மாநக​ராட்​சி​யில் 13 லட்​சத்து 30 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சொத்து உரிமை​யாளர்​கள் உள்​ளனர். இவர்​களிடம் இருந்து ஆண்​டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வரு​வாய் கிடைக்​கிறது. மாநக​ராட்​சிக்கு அதிக வரு​வாய் இதன் மூலமே கிடைக்​கிறது.

ஏற்​கெனவே சொத்து உரிமை​யாளரின் சுயம​திப்​பீடு அடிப்​படை​யில் சொத்து வரி நிர்​ண​யிக்​கப்​பட்டு மாநக​ராட்சி சார்​பில் வசூலிக்​கப்​பட்டு வந்​தது. அதன் பின்​னர் நவீன தொழில்​நுட்​பங்​களை கொண்டு துல்​லிய சொத்து வரி மதிப்​பீட்டை மாநக​ராட்சி மேற்​கொண்டு வரு​கிறது. இதில் குறை​வாக மதிப்​பிடப்​பட்ட சொத்​துக்கு மறும​திப்​பீடு செய்​து, அவர்​களுக்கு மட்​டும் மாநக​ராட்சி தரப்​பில் கடிதம் அனுப்​பப்​பட்டு வரு​கிறது.

இதனிடையே, சுமார் 10 மடங்​குக்​குமேல் சொத்து வரி உயர்த்​தப்​பட்​டிருப்​ப​தாக பொது​மக்​கள் புகார் தெரிவித்து வரு​கின்​றனர். சென்​னை​யில் 100 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக முன்​னாள் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கண்​டனம் தெரி​வித்​திருந்​தார். மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா​வும், இந்த நடவடிக்​கைக்கு அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், துல்​லிய சொத்​து​வரி மதிப்​பீட்டை நிறுத்தி வைப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன் நேற்​றிரவு அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில், குறை​வான மதிப்​பீடு (Under Assessed) செய்​யப்​பட்​ட​தாக கண்​டறியப்​பட்ட சில சொத்​துகளுக்​கான வரி மதிப்​பீட்டை மாற்​றியமைக்​கும் நடவடிக்​கையை மாநக​ராட்சி மேற்​கொண்​டிருந்​தது.

இந்த வரி மாற்​றியமைப்பு குறித்து மறு​பரிசீலனை செய்​யு​மாறு வலி​யுறுத்​தி, கடந்த சில நாட்​களாக பொது​மக்​களிடம் இருந்து பல கோரிக்​கைகள் பெறப்​பட்​டன. இந்த திருத்​திய மதிப்​பீடு தொடர்​பாக பொது​மக்​கள் எழுப்​பிய கோரிக்​கைகளை கவன​மாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்​றியமைப்பை உடனடி​யாக நிறுத்​திவைக்க மாநக​ராட்சி முடிவு செய்​துள்​ளது.

இதன்​படி, வரித்​தொகை​யானது மாற்​றியமைக்​கப்​படு​வதற்கு முன்பு நடை​முறை​யில் இருந்த அளவுக்கே மீண்​டும் மாற்​றப்​படும். மாற்​றியமைக்​கப்​பட்ட வரித்​தொகையை ஏற்​கெனவே செலுத்​தி​ய​வர்​களுக்​கு, அந்​தத்​தொகை அடுத்​தடுத்த அரை​யாண்​டு​களுக்​கான முன்பண வரி​யாக ஈடு செய்​யப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

சொத்து வரி மறுமதிப்பீடு நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
பேரவையில் மக்கள் பிரச்சினையை சுட்டிக்காட்டாததால் திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஸ்டாலின் அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in