ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: சென்னை மாநகராட்சி தகவல்

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: சென்னை மாநகராட்சி தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில் ஏப்​.30-ம் தேதிக்​குள் சொத்து வரியைச் செலுத்​து​வோர் 5 சதவீதம் தள்​ளு​படி பெறலாம் என்று மாநக​ராட்சி நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

2026-27-ம் நிதி​யாண்டு தொடங்​கி​விட்​டதால், மாநக​ராட்​சி​யில் உள்ள சொத்து உரிமை​யாளர்​கள், அரை​யாண்​டின் முதல் 30 நாட்​களுக்​குள் அதாவது வரும் ஏப்​ரல் மாதம் 30-ம் தேதிக்​குள் முதல் அரை​யாண்​டுக்​கான சொத்து வரியைச் செலுத்​தி​னால், மாநக​ராட்சி சார்​பில் சொத்து வரி​யில் 5 சதவீதம் வரை தள்​ளு​படி வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வரி செலுத்​து​வதோடு மட்​டுமில்​லாமல், அரசு தரும் இந்த தள்​ளு​படியை சரி​யாகப் பயன்​படுத்​தி​னால் அதி​கபட்​ச​மாக ரூ.5 ஆயிரம் வரை மிச்​சப்​படுத்​தலாம். மேலும் ஒரு சதவீத அபராதத் தொகை​யை​யும் தவிர்க்​கலாம்.

பொது​மக்​கள் தங்​கள் வரி​களை எளிமை​யான முறை​யில் செலுத்த நேரடி​யாக கணினி வரி வசூல் மையங்​கள், https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணை​யதளம், டிஎன் அர்​பன் இ-சேவை செயலி மற்​றும் யுபிஐ செயலிகள் என பல்​வேறு வசதி​கள் இருக்கின்றன.

ஏப்​.30-க்கு இன்​னும் 2 நாட்​கள் மட்​டுமே இருப்​ப​தால் பொது​மக்​கள் இந்த சலுகையை பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு மாநக​ராட்​சி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

ஏப்.30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.10.70 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in