சென்னை விமான நிலையத்தில் ரூ.10.70 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.70 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.10.70 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. தாய்​லாந்​தில் இருந்து கஞ்​சாவை கடத்தி வந்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து தாய் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் சென்​னைக்கு நேற்று வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பய ணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்பி கொண்​டிருந்​தனர்.

அப்​போது வந்த இளைஞர் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் தாய்​லாந்து சென்​று​விட்டு வந்த அவரை அதி​காரி​கள் சோதனை செய்​தனர். பின்​னர் அவர் வைத்​திருந்த சூட்​கேஸை திறந்து சோதனை செய்​தனர்.

அதில் இருந்த 23 பார்​சல்​களை பிரித்து பார்த்​த​போது, ரூ.10.70 கோடி மதிப்​புள்ள 10.70 கிலோ பதப்​படுத்​தப்​பட்ட உயர்ரக ஹைட்​ரோ​போனிக் கஞ்சா மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

அந்த கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், இளைஞரை கைது செய்​தனர். முதல்​ கட்ட விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட இளைஞர் கடத்​தல் குரு​வி​யாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது. தொடர்ந்து அவரிடம் அதி​காரி​கள் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.70 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
200-க்கும் மேலான இடங்களில் தவெக வெற்றிபெறும்: செங்கோட்டையன் நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in