கோயம்பேடு, மண்ணடியில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோயம்பேடு, மண்ணடியில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on: 
1 min read

சென்னை: சென்னை கோயம்​பேடு மற்​றும் மண்​ணடி ஆகிய பகுதி​களில் தொழிலா​ளர் துறை மற்​றும் குழந்​தைத் தொழிலா​ளர் தடுப்​புப் படை​யினர் நடத்​திய அதிரடி ஆய்​வில் இரு சிறு​வர்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

சென்னை மாவட்ட ஆட்​சி​யர் எஸ்.மாலதி ஹெலன் அறிவுறுத்தலின்​படி, குழந்​தைத் தொழிலா​ளர் தடுப்​புப் படைக்குழு​வினர் நகரின் முக்​கியப் பகு​தி​களில் தீவிர ஆய்வு மேற்கொண்டு சிறார்களை மீட்​டுள்​ளனர். கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தில் நடத்​திய ஆய்​வில், அங்​குப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த 15 வயது சிறுவன் மீட்​கப்​பட்​டார்.

இதே​போல் மண்​ணடி போலீஸ் காலனி, மெட்ரோ வளாகத்​தில் உள்ள டீக்​கடை ஒன்​றில் பணி​யில் இருந்த 15 வயது சிறு​வன் மீட்கப்​பட்​டார். மீட்​கப்​பட்ட இரண்டு சிறு​வர்​கள் குறித்​தும் காவல் நிலை​யத்​தில் சி.எஸ்​.ஆர் பதிவு செய்​யப்​பட்டு, அவர்​கள் சென்னை குழந்​தைகள் நலக்​குழு​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்​சி​யர் எஸ். மாலதி ஹெலன் கூறுகை​யில், “15 முதல் 18 வயது வரையி​லான வளரிளம் பருவத்தினரை அபாயகர​மான தொழில்​களில் ஈடுபடுத்தக்கூடாது. இந்த சட்​டத்தை மீறி குழந்​தைகளை​ பணியில் அமர்த்​தி​னால் 2 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை அல்​லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்​டும் சேர்த்​துத் தண்​டனை​யாக விதிக்​கப்​படும்​” என்றார்.

கோயம்பேடு, மண்ணடியில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்களா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in