

சென்னை: அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் உட்பட 7 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திருத்தணி - அரக்கோணத்துக்கு வரும் 19 முதல் 25-ம் தேதி வரை இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், மறுமார்க்கமாக, அரக்கோணம் - திருத்தணிக்கு வரும் 20 முதல் 26-ம் தேதி வரை அதிகாலை 4, 5 மணிக்கு இயக்கப்படும் 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து
சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு வரும் 20 முதல் 25-ம் தேதி வரை காலை 11, இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு வரும் 20 முதல் ஏப்.25-ம் தேதி வரை நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
இந்த ரயில் திருவாலங்காடு முதல் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும்.இத்தகவல், சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.