

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக, 25 மின்சார ரயில்களின் சேவையில் ஆக.25-ம் தேதி முதல் செப்.6-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு ஆக.25 முதல் செப்.5-ம் தேதி வரை (வார நாட்களில் மட்டும்) இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு மேற்படி தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்கு இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மேற்படி தேதிகளில் இரவு 10.20, 11.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
நேரம் மாற்றம்
சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரிக்கு மேற்படி தேதிகளில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு மேற்படி தேதிகளில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு ஆக.26 முதல் செப்.7-ம் தேதி வரை (வார நாட்களில்) புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. ஆக.30-ம் தேதி முதல் செப்.6-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் வரை 4 மின்சார ரயில்களும், தாம்பரம் - சென்னை கடற்கரை வரை 2 மின்சார ரயில்களும், திருமால்பூர் - சென்னை கடற்கரை வரை ஒரு மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளன.
இதுதவிர, 6 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.