

சென்னை: மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி பிற்பகல் 3.23 மணிக்கு புறப்படும்.
செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு மாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏசி மின்சார ரயில் இனி, தாம்பரத்தில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.