கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை முதல் 25 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை முதல் 25 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​ய மறுசீரமைப்பு பணி காரண​மாக, 25 மின்​சார ரயில்​களின் சேவை​யில் நாளை (ஆக.25) முதல் செப்​.6-ம் தேதி வரை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

அதன் விவரம்: சென்னை கடற்கரை - தாம்​பரத்​துக்கு நாளை (ஆக.25) முதல் செப்​.5-ம் தேதி வரை (வார நாட்​களில் மட்​டும்) இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன.

திரு​மால்​பூர் - சென்னை கடற்​கரைக்கு மேற்​படி தேதி​களில் இரவு 8 மணிக்கு புறப்​படும் மின்​சார ரயில், தாம்​பரம் - கடற்​கரை இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்​ளது.

கூடு​வாஞ்​சேரி - சென்னை கடற்​கரைக்கு இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், தாம்​பரம் - கடற்​கரை இடையே பகுதி ரத்து செய்​யப்​பட​வுள்​ளன.

செங்​கல்​பட்டு - சென்னை கடற்​கரைக்கு மேற்​படி தேதி​களில் இரவு 10.20, 11.00 ஆகிய நேரங்​களில் புறப்​படும் மின்​சார ரயில்​கள், தாம்​பரம் - கடற்​கரை இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்​ளன.

நேரம் மாற்​றம்

சென்னை கடற்கரை - கூடு​வாஞ்​சேரிக்கு மேற்​படி தேதி​களில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமத​மாக இரவு 9.50 மணிக்கு புறப்​படும்.

சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு மேற்​படி தேதி​களில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்​ன​தாக, இரவு 10.15 மணிக்கு புறப்​படும்.

சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு ஆக.26 முதல் செப்​.7-ம் தேதி வரை (வார நாட்​களில்) புறப்பட வேண்​டிய மின்​சார ரயில், கடற்​கரை - தாம்​பரம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கிறது.

ஆக.30-ம் தேதி முதல் செப்​.6-ம் தேதி வரை ஞாயிற்​றுக்​கிழமை​களில், சென்னை கடற்​கரை - தாம்​பரம் வரை 4 மின்​சார ரயில்​களும், தாம்​பரம் - சென்னை கடற்​கரை வரை 2 மின்​சார ரயில்​களும், திரு​மால்​பூர் - சென்னை கடற்​கரை வரை ஒரு மின்​சார ரயிலும் ரத்து செய்​யப்பட உள்​ளன.

இதுத​விர, 6 மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளன. இத்​தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை முதல் 25 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை | டிபன் கடைக்காரர் வீட்டில் கொள்ளை: தினமும் சவாரிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in