ஜூன் 30-ல் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்

ஜூன் 30-ல் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: திருநெல்​வேலி யார்​டில் மறுசீரமைப்பு பணி காரணமாக, சென்னை எழும்​பூர் - நாகர்​கோ​வில் வந்தே பாரத் ரயில் சேவை​யில் வரும் 30-ம் தேதி மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன்​படி, சென்னை எழும்​பூர் - நாகர்​கோ​விலுக்கு வரும் 30-ம் தேதி அதி​காலை 5 மணிக்கு புறப்பட வேண்​டிய வந்தே பாரத் ரயில் (20627), 45 நிமிடங்​கள் தாமத​மாக அதி​காலை 5.45 மணிக்கு புறப்​பட்டு செல்​லும்.

நாகர்​கோ​வில் - சென்னை எழும்​பூருக்கு அன்று பிற்​பகல் 2.20 மணிக்கு புறப்பட வேண்​டிய வந்தே பாரத் ரயில் (20628), ஒரு மணி நேரம் 10 நிமிடங்​கள் தாமத​மாக பிற்​பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு செல்​லும்.

திருச்சி - திரு​வனந்​த​புரம் சென்ட்​ரலுக்கு வரும் 30-ம் தேதி காலை 7.15 மணிக்கு புறப்​படும் அதி​விரைவு ரயில் (22627) விருதுநகர், ராஜ​பாளை​யம், தென்​காசி, கொல்​லம் வழி​யாக திருப்பி விடப்​படும். இந்த ரயில் சாத்​தூர், கோவில்​பட்​டி, திருநெல்​வேலி, வள்ளியூர், நாகர்​கோ​வில் டவுன், குழித்​துறை வழி​யாக இயக்கப்படாது.

கூடு​தல் நிறுத்​த​மாக, தென்​காசி, செங்​கோட்​டை, புனலூர், கொல்லம் ஆகிய நிலை​யங்​களில் நின்று செல்​லும். இத்​தகவல், தெற்கு ரயில்வே செய்​திக் குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஜூன் 30-ல் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்
சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in