வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மார்ச் 24 வரை மிதமான மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மார்ச் 24 வரை மிதமான மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகம் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (மார்ச் 22) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 23, 24 தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

25, 26 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலும், 23, 24 தேதிகளில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தும் இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு ஆகிய இடங்களில் தலா 3 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, மதுரை மாவட்டம் சாத்தியார், விருதுநகர் மாவட்டம் சிவகா, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மார்ச் 24 வரை மிதமான மழை வாய்ப்பு
புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் இன்னும் ஒருநாள் மட்டுமே... - இண்டியா கூட்டணியில் இழுபறி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in