மதுரை, கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்
மதுரை, கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: மதுரை, கோவை, நீல​கிரி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்​கை: தென்​மேற்​குப் பரு​வ​மழை கேரளப் பகு​தி​களில் 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்​ளது.

குமரிக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல சுழற்​சி​யும், வடகிழக்கு தமிழகம் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல சுழற்​சி​யும் நில​வு​கின்​றன.

இது மட்​டுமின்​றி, மகா​ராஷ்டி​ரா​வின் மேற்கு விதர்பா மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல சுழற்​சி​யில் இருந்து உள் கர்​நாட​கா, தமிழகம் வழி​யாக மன்​னார் வளை​குடா வரை ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை​யும் நில​வு​கிறது.

இதன் காரண​மாக, தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் அடுத்த 5 நாட்​களுக்கு இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று நீல​கிரி, கோவை, திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல், மதுரை, சிவகங்​கை, புதுக்​கோட்​டை, திருச்​சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்​கல், தரு​மபுரி, கிருஷ்ணகிரி மாவட்​டங்​களி​லும், நாளை கோவை, திருப்​பூர் மாவட்ட மலைப் பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல், மதுரை மாவட்​டங்​களி​லும் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும்.

அடுத்த 3 நாட்​களுக்கு தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 2-3 டிகிரி செல்​சி​யஸ் வரை குறையக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. வெப்​பநிலை 28 டிகிரி முதல் 37 டிகிரி செல்​சி​யஸ் வரை இருக்​கக்​கூடும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

மதுரை, கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
தவெக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் மீது சென்னை, கடலூரில் வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in