கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஆக.1-ல் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஆக.1-ல் கனமழைக்கு வாய்ப்பு

படம்: வேளாங்கண்ணி ராஜ்

Updated on
2 min read

சென்னை: கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆக.1-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோயம்புத்தூர் சின்னக்கல்லாரில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. புதன்கிழமை (ஜூலை 29)மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை (ஜூலை 30) நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.1-ம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆக.2-ம் தேதி முதல் ஆக.4-ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் வரும் 31-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 29, 30) ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் ஜூலை 30-ம் தேதியும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆக.2-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஆக.1-ல் கனமழைக்கு வாய்ப்பு
“அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி” - முதல்வர் பரிசீலிப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in