“அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி” - முதல்வர் பரிசீலிப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

அமைச்சர் ராஜ்மோகன் |கோப்புப் படம் 

அமைச்சர் ராஜ்மோகன் |கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: “அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி போட வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல துறைகள் சம்பந்தப்பட்டது. முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார்” என பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழாவின்போது, அமைச்சர் பொன்முடி இருந்தார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பின்னாடிதான் பாடப்பட்டது. இது வரலாற்றிலேயே முதல் முறை நடந்ததாக சொல்வது தவறு.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குதான் முன்னுரிமை கொடுப்போம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்வில் அவர் ஒன்றை கடைப்பிடிக்கலாம். தவெக அன்றும், இன்றும், என்றும் தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் எங்கள் நிகழ்ச்சியை துவங்கும். தேர்தலுக்கு முன்பு முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் ஒரு விழாவில் பங்கேற்றபோது, அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னாடிதான் பாடினார்கள்.

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி போட வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல துறைகள் சம்மந்தப்பட்டது. முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார்.

திமுக, அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட, மக்களுக்கு பயன்தரக்கூடிய நல்ல திட்டங்கள் இருந்தால், பகைமையோடு அது எந்த காரணத்துக்காகவும் நிறுத்தப்படாது. அம்மா உணவகத்தின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களை கொண்டு வருவதில்தான் போட்டி போடுவோம்.

கொளத்தூரில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு தொடர்பாக பேசியபோது, ‘ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்’ என்கிற மாதிரி ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவர்களுடைய உரிமை. நன்றாக ஆராய்ச்சி செய்யட்டும். சட்ட ரீதியாக நாங்கள் எதையும் எதிர்க்கொள்ளத் தயாராக இருந்தோம். அவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இன்னும் தோல்வி அடைந்ததற்கு காரணத்தை அவர்கள் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமைச் சொல்கிறார்கள், இவிஎம் மெஷினைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.

தனியார் பள்ளிகள் கட்டணங்களை குறைக்காவிட்டால், ஏற்கெனவே உள்ள கட்டண நிர்ணய குழு மறு கட்டமைப்பு செய்யப்படும். அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன் |கோப்புப் படம்&nbsp;</p></div>
மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா - ஓசூர் இளைஞர்கள் அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in