6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திருநெல்​வேலி உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடதமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், மெதுவாக தென்​மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, புதுச்​சேரி கடலோரப்​ பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யாக வலுக் குறைந்​தது.

தென்​னிந்​திய பகு​தி மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு​கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களி​லும், 5-ம் தேதி தென் தமிழகத்​தில் பெரும்பாலான இடங்​களி​லும், வட தமிழகத்தில் ஒருசில இடங்​களி

லும், 6 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்​களிலும் மிதமான மழைபெய்​யக்​கூடும். இன்று கிருஷ்ணகிரி, தரு​மபுரி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், திருநெல்​வேலி, குமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்யும்.

6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
புயலின்போது பிடிபட்ட 1,127 பாம்புகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in