

கோப்புப்படம்
சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் 1,127 பாம்புகள் பிடிக்கப்பட்டு, அவற்றை பத்திரமாக வனப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் விட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டும் 125 பாம்புகள் பிடிபட்டுள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கிய ஏராளமான கால்நடைகளும் மீட்கப்பட்டன.