தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய உயரதி​காரி வி.ஆர்.துரை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

குமரிக்​கடலில் இருந்து உள் தமிழகத்​தின் வழி​யாக ராயலசீமா வரை காற்​றழுத்​தத் தாழ்​வு​ப்​பாதை நில​வு​கிறது. இது​த​விர, தெற்கு கேரளம், அதனை ஒட்​டிய பகுதி​களின் மேல் ஒரு வளி மண்​டல சுழற்சி நில​வு​கிறது.

இதன் காரண​மாக, நவ.25 நாமக்​கல், கரூர், திருச்​சி, தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், புதுக்​கோட்டை, சிவகங்கை, ராம​நாத​புரம், திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​காலிலும் கனமழை பெய்​யக்​கூடும்.

சென்னை, திரு​வள் ளூர், செங்​கல்​பட்டு, காஞ்சிபுரம், ராணிப்​பேட்டை, நீலகிரி, கோவை, திருப்​பூர், ஈரோடு, சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்​புரம் உள்ளிட்ட 20 மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகரில் 25-ம் தேதி வானம் மேகமூட்​டத்​துடன் காணப்படும். சில பகுதிகளில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்டை, நீல​கிரி, கோவை, திருப்​பூர், ஈரோடு, சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்​டங்​களிலும் புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​யிலும் மிதமான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்​தில், தமிழகம், புதுச்​சேரி, காரைக்கால் பகுதி​களி​ல் மழை பெய்​துள்​ளது. அதி​கபட்​சமாக சேலம் மாவட்​டம் ஆத்​தூரில் 9 செ.மீ மழை பதிவாகி​ உள்​ளது.

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற விண்ணதிரும் முழக்கத்தோடு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

X