‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற விண்ணதிரும் முழக்கத்தோடு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற விண்ணதிரும் முழக்கத்தோடு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Updated on: 
2 min read

திருவண்ணாமலை: பஞ்​சபூத தலங்​களில் அக்னி தலமாகவும், நினைத்​தாலே முக்தி தரும் தலமாகவும் திகழ்​வது திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில். இங்கு நடை​பெறும் கார்த்​திகை தீபத் திரு​விழா மிகவும் சிறப்​புமிக்​கது.

இந்த ஆண்டு கார்த்​திகை தீபத் திரு​விழா நவ.15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விநாயகரும், சந்​திரசேகரரும் தினமும் காலை உற்​சவத்​திலும், விநாயகர், வள்ளி, தெய்​வானை சமேத முருகர், உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார், பராசக்தி அம்​மன், சண்​டிகேஸ்வரர் இரவு உற்​சவத்​திலும் தனித்​தனி வாக​னங்​களில் வீதி​யுலா வந்​தனர். விழா​வின் 7-ம் நாளான நவ.21-ம் தேதி மகா தேரோட்​டம் நடை​பெற்​றது.

விழா​வின் முக்​கிய நிகழ்​வாக, மகா தீபம் நேற்று மாலை ஏற்​றப்பட்​டது. இதற்​காக, மகாதீப கொப்​பரைக்கு கோயில் வளாகத்​தில் நேற்று முன்​தினம் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்டு, மலை உச்​சிக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. நேற்று அதி​காலை கோயி​லில் பரணி தீபம் ஏற்​றப்​பட்​டது.

அண்​ணா​மலை​யார் சன்​னதி​யில் உள்ள அர்த்த மண்​டபத்​தில் அதி​காலை 4 மணிக்கு ஏகன் அநேகன் தத்​து​வத்தை எடுத்​துரைத்து பஞ்​சபூதங்​களும் நானே என்​பதை இறைவன் உணர்த்​தும் வகை​யில் பரணி தீபத்தை சிவாச்​சா​ரியார்​கள் ஏற்​றினர். பின்​னர், அந்த தீபத்​தைக் கொண்டு ஐந்து மடக்​கு​களில் தீபம் ஏற்​றினர்.

மாலை 4 மணி முதல் அண்​ணா​மலை​யார் கோயில் 3-ம் பிரகாரத்​தில் கொடிமரம் முன்பு உள்ள தீப​தரிசன மண்​டபத்​தில் பஞ்​சமூர்த்​தி​களான விநாயகர், வள்ளி, தெய்​வானை சமேத முருகர், உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார், பராசக்தி அம்​மன், சண்​டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்​காரத்​தில் எழுந்​தருளினர். ஆணும், பெண்​ணும் சமம் என்ற தத்​து​வத்தை உணர்த்த உமையாளுக்கு தனது இடபா கத்தை வழங்​கிய அண்​ணா​மலை​யார் ‘அர்த்​தநாரீஸ்வரர்’ கோலத்​தில் ஆனந்த தாண்​ட​வத்​துடன் மாலை 5.50 மணி அளவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்​தருளினார்.

ஆண்​டுக்கு ஒரு முறை மகா தீபத்​தன்று மட்​டுமே சில நிமிடங்​கள் காட்சி தரும் அர்த்​தநாரீஸ்வரரை பக்​தர்​கள் தரி​சித்​தனர். அப்​போது, கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்​றப்​பட்​டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்​புறம் உள்ள 2,668 அடி மலை உச்​சி​யில் பரு​வத​ராஜ குல வம்​சத்​தினர் மகா தீபத்தை ஏற்​றினர். அப்​போது, கோயி​லிலும், கிரிவலப் பாதையிலும் திரண்​டிருந்த பக்​தர்​கள், ‘அண்​ணா​மலை​யாருக்கு அரோகரா’ என விண்​ணதிர முழக்​கமிட்​டனர். மலை​யில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டதும், கோயி​லின் நவ கோபுரங்​கள் மற்​றும் வளாகங்​களில் மின்​விளக்​கு​கள் அலங்​காரம் ஜொலித்​தன. அதைத் தொடர்ந்து கோயில்​கள், வீடுகளில் பக்​தர்​கள் அகல் விளக்கு ஏற்றினர்.

தீபத் திரு​விழாவையொட்டி 14 கி.மீ. தொலை​வுள்ள தீபமலையை சுற்றி அதி​காலை​யில் இருந்து பக்​தர்​கள் கிரிவலம் சென்​றனர். நகரில் அவ்​வப்​போது சாரல் மழை பெய்​த​போதும், பக்​தர்​கள் அதை பொருட்​படுத்​தாமல் கிரிவலம் சென்​றனர்.

தீபத் திரு​விழா நிறைவடைந்த நிலை​யில், இன்று முதல் 3 நாட்களுக்கு இரவு ஐயங்​குளத்​தில் சந்​திரசேகரர், பராசக்தி அம்​மன், சுப்​பிரமணி​யர் தெப்​பல் உற்​சவ​மும், 26-ம் தேதி அதி​காலை உண்​ணா​முலை​யம்​மன் சமேத அண்​ணா​மலை​யார் கிரிவலம் செல்​லும் நிகழ்​வும் நடை​பெறும். 28-ம் தேதி சண்​டிகேஸ்வரர் உற்​சவத்​துடன் தீபத் திரு​விழா நிறைவு பெறுகிறது.

மகா தீப விழா​வில் உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், அமைச்​சர்கள் ரமேஷ், சம்​பத்​குமார், ஆட்சி​யர் வந்​தனா கார்க், கோயில் இணை ஆணை​யர் பரணிதரன், தக்​கார் மீனாட்சி சுந்​தரம் கலந்​து​கொண்​டனர்.

மாநகரம் முழு​வதும் 15,500 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டனர். ஏஐ தொழில்​நுட்ப வசதி​யுடன் கூடிய 1,180 அதிநவீன கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டிருந்​தன. பக்​தர்​களுக்கு தேவையான குடிநீர், கழிப்​பறை வசதி​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

பரணி தீபம் ஏற்​றும் நிகழ்​வில் உள்​ளூர் பக்​தர்​கள் 500, பிற மாவட்ட பக்​தர்​கள் 500 பேருக்​கும், மகா தீபத்​துக்கு உள்​ளூர் பக்​தர்​கள் 1,000, வெளிமாவட்ட பக்​தர்​கள் 1,000 என 2 ஆயிரம் பேருக்​கும் இல​வச அனுமதிச் சீட்​டுகள் வழங்​கப்​பட்​டன. மொத்​தம் 8,500 பக்​தர்​கள் கோயிலுக்​குள் அனுமதிக்​கப்​பட்​டனர்.

11 நாள் காட்சி தரும் மகா தீபம்

மொத்​தம் 3,500 கிலோ நெய் மற்​றும் 1,500 மீட்​டர் காடா துணிகளை பயன்​படுத்தி மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. கடந்த ஆண்​டைப்​போல இந்த ஆண்​டும் மலை​யேற பக்​தர்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. மலைமீது ஏற்​றப்​பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்​கள் பக்​தர்​களுக்கு காட்சி அளிக்​கும்.

‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற விண்ணதிரும் முழக்கத்தோடு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை: திருப்பரங்குன்றத்தில் போராட்டம்

X