கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: கடலூர் உள்​ளிட்ட 7 மாவட்​டங்களில் இன்று (ஜன. 12) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், வடகிழக்கு இலங்கை கடலோரப் பகு​தி​களில் முல்​லைத்​தீவுக்கு அரு​கில் நேற்று முன்​தினம் மாலை காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக கரையைக் கடந்​தது.

இது படிப்​படி​யாக வலு குறைந்​து, தென் கடலோர தமிழகம் மற்​றும் அதையொட்​டிய மன்​னார் வளை​குடா பகு​தி​களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்​சி​யாக நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று சில இடங்​களி​லும், நாளை தென் தமிழகத்​தில் சில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், வரும் 14-ம் தேதி தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், 15 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும் வறண்ட வானிலை​யும் நில​வக்​கூடும்.

தமிழகத்​தில் இன்று கடலூர், அரியலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை மாவட்​டங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​யிலும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் பொது​வாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகப்​பட்​டினம் மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் 9 செ.மீ., திருப்​பூண்​டி​யில் 6 செ.மீ., வேதா​ரண்​யம், திருநெல்​வேலி மாவட்​டம் ஊத்​தில் 5 செ.மீ., நாலு​முக்​கு, காக்​காச்​சி, தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி, புதுக்​கோட்டை மாவட்​டம் நாகுடி, நாகப்​பட்​டினம் மாவட்​டம் கோடியக்​கரை,

தலை​ஞா​யிறு ஆகிய இடங்​களில் 4 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்க வேண்டும்: இந்தியா அழுத்தம் தர பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in