தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வலியுறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை உயர் நீதி​மன்​றம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

Updated on
1 min read

சென்னை: ‘அரசு நிகழ்ச்​சிகளில் தமிழ்த்​தாய் வாழ்த்​துப் பாடலை கடைசி​யாகப் பாட வேண்​டுமென மத்​திய அரசின் அறி​வி்ப்​பாணை​யில் எந்த இடத்​தி​லும் வலி​யுறுத்​த​வில்​லை’ என சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சிகளில் தமிழ்த்​தாய் வாழ்த்​துப்​ பாடலை முதலில் பாடு​வதை உறு​தி​செய்ய அதி​காரி​களுக்கு உத்​தர​விடக் கோரி, சென்​னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில், “தமிழகத்​தில் நடை​பெறும் அரசு நிகழ்​வு​களில் தமிழ்த்​தாய் வாழ்த்​துப் ​பாடலை முதலிலும், தேசிய கீதத்தை நிறை​வாக​வும் பாடி நிகழ்ச்​சியை நடத்​து​வது பல ஆண்​டு​களாகப் பின்​பற்​றப்​பட்டு வரும் மரபாக உள்​ளது. ஆனால் சமீப​கால​மாக இந்த நடை​முறை​யில் குளறு​படியை ஏற்​படுத்​தும் வித​மாக தமிழகத்​தில் நடை​பெறும் மத்​திய அரசு நிகழ்​வு​களில் வந்தே மாதர​மும், தேசிய கீத​மும் முதலில் பாடப்​பட்​டு, அதன்​பிறகு தமிழ்த்​தாய் வாழ்த்​துப்​பாட வலி​யுறுத்​தப்​பட்டு வரு​கிறது.

அரசு நிகழ்ச்​சியை வந்தே மாதரம் பாடி தொடங்க வேண்​டுமென மத்​திய உள்​துறை அமைச்​சகம் கடந்த ஜன.28 அன்று பிறப்​பித்​துள்ள சுற்​றறிக்​கை​யில், தமிழ்த்​தாய் வாழ்த்​துப்​பாடலை பாடி அரசு நிகழ்ச்​சி​யைத் தொடங்க எந்த தடை​யும் விதிக்​க​வில்​லை. ‘நீ​ராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்​தாய் வாழ்த்​துப்​ பாடல் வெறும் சடங்கு மட்​டுமல்ல. அது ஒட்​டுமொத்த தமிழர்​களின் உணர்​வு, கலச்​சா​ரம் மற்​றும் அடை​யாளத்​தின் எதிரொலிப்​பு.

எனவே அரசு நிகழ்​வு​களில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்​டும் என வலி​யுறுத்​தி, மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள சுற்​றறிக்​கையை ரத்து செய்ய வேண்​டும். எதிர்​காலத்​தில் அரசு நிகழ்ச்​சிகளில் இந்த கலாச்​சார மோதலைத் தவிர்க்​கும் வகை​யில், தமிழ்த்​தாய் வாழ்த்​துப் பாடலை முதலில் பாடும் வகை​யில் தகுந்த நிர்​வாக அறி​வுறுத்​தல்​களை பிறப்​பிக்க மத்​திய, மாநில அரசுகளுக்கு உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆஜராகி, “இதுதொடர்​பாக புதிய அறி​விப்​பாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தால் இந்த வழக்கு செல்​லத்​தக்​கதல்ல.

தமிழகத்​தில் நடை​பெறும் அரசு நிகழ்​வு​களில் வந்தே மாதரம் முதலில் பாடி, அதன்​பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழ்த்​தாய் வாழ்த்​துப் பாடலை கடைசி​யாகத்​தான் பாட வேண்​டுமென அந்த அறி​விப்​பாணை​யில் எந்த இடத்​தி​லும் வலி​யுறுத்​த​வில்​லை” என்​றார். அதையடுத்து, நீதிப​தி​கள் இந்த வழக்கு வி​சா​ரணை​யை அடுத்​த வாரத்​துக்​கு தள்​ளிவைத்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதி​மன்​றம்</p></div>
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தீர்மானம் நிறைவேற்றம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in