மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகாவின் புதிய திட்ட அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை - கமல்ஹாசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகாவின் புதிய திட்ட அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை - கமல்ஹாசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
Updated on
1 min read

சென்னை: “மேகதாட்டு அணை குறித்து கர்​நாடக அரசின் திருத்​தப்​பட்ட புதிய திட்ட அறிக்கை இது​வரை மத்​திய நீர் ஆணை​யத்​துக்கு வந்து சேர​வில்​லை” என்று மநீம தலை​வர் கமலஹாசன் நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பிய கேள்விக்கு மத்​திய அரசு பதில் அளித்​துள்​ளது.

மாநிலங்​களவை​யில் மக்​கள் நீதி மய்​யம் தலை​வரும், எம்​.பி.​யு​மான கமல்​ஹாசன், “மேகே​தாட்டு திட்​டத்​துக்​காக திருத்​தப்​பட்ட திட்ட அறிக்​கையை கர்​நாடக அரசு சமர்ப்​பித்​துள்​ள​தா? இத்​திட்​டத்​தால் தமிழகத்​தின் பாசன வசதி மற்​றும் குடிநீர் தேவை​களுக்கு பாதிப்பு ஏற்​படுமா என ஆய்வு செய்​யப்​பட்​டுள்​ள​தா?” என கேள்வி​களை எழுப்​பி​யிருந்​தார்.

இக்​கேள்வி​களுக்கு மத்​திய ஜல் சக்​தித் துறை இணை​யமைச்​சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்​துள்ள பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: கர்​நாடக அரசு 2019-ஆம் ஆண்டு சமர்ப்​பித்த மேக​தாட்டு அணை மற்​றும் குடிநீர்த் திட்​டத்​தின் விரி​வான திட்ட அறிக்கை ஏற்​க​னவே திருப்பி அனுப்​பப்​பட்​டு​விட்​டது.

காவிரி நடு​வர் மன்​றத் தீர்ப்பு மற்​றும் மத்​திய நீர் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தல்​களுக்கு உட்​பட்டு திருத்​தப்​பட்ட புதிய திட்ட அறிக்​கை​யைச் சமர்ப்​பிக்​கு​மாறு கர்​நாடக அரசிடம் கேட்​கப்​பட்​டுள்​ளது.

இது​வரை அத்​தகைய திருத்​தப்​பட்ட புதிய திட்ட அறிக்கை எது​வும் மத்​திய நீர் ஆணை​யத்​திற்கு வந்து சேர​வில்​லை. காவிரிப் படு​கை​யில் அமை​யும் நீர் திட்​டங்​களுக்​கான திட்ட அறிக்​கைகளை மத்​திய நீர் ஆணை​யம் பரிசீலிக்​கும் போது, மத்​திய நீர் ஆணை​யத்​தின் நடை​முறை வழி​காட்​டு​தல்​கள், காவிரி நடு​வர் மன்​றத்​தின் இறு​தித் தீர்ப்பு மற்​றும் 2018 பிப்​ர​வரி 16 அன்று உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் மட்​டுமே ஆய்வு மற்​றும் மதிப்​பீடு செய்​யப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.இதே​போல், மின்துறை தொடர்பாக மற்​றொரு கேள்​வி​யும் எழுப்​பி​யிருந்​தார்.

இக்​கேள்வி​களுக்கு மத்​திய மின்​சா​ரம் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை இணை​யமைச்​சர் ஸ்ரீபத் நாயக் அளித்த பதில்: கடந்த 5 ஆண்​டு​களில் தமிழகத்​தின் உச்​சகட்ட மின் தேவை​கள் அனைத்​தும் 100 சதவீதம் பூர்த்தி செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் மின் பற்​றாக்​குறை 0 சதவீத​மாக உள்​ளது. தமிழகத்​தில் துணை மின்​நிலை​யங்​களைப் புதுப்​பிக்​க​வும், பேட்​டரி சேமிப்பு அமைப்​பு​களை அமைக்​க​வும் ரூ.785.21 கோடி மானி​யத்​தில் 10 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

ஸ்மார்ட் மீட்​டர் பொருத்த ரூ.9,235 கோடி​யும், மின் விநி​யோகக் கட்​டமைப்​பைச் சீரமைக்க ரூ.9,568 கோடி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மாநிலங்​களுக்கு இடையே​யான மின் இணைப்பு திட்​டத்​தின் கீழ் 8.38 கிகா​வாட் புதுப்​பிக்​கத்​தக்க ஆற்​றலை இணைக்க திட்​ட​மிடப்​பட்​டு, அதில் 2.38 கிகா​வாட் திட்​டங்​கள் தமிழகத்​தில் ஏற்​கெனவே செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளன என்றார்.

மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகாவின் புதிய திட்ட அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை - கமல்ஹாசன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
காவல் துறையினரின் குறைகளை தீர்க்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in