பழநி கோயிலில் செல்போன் தடை நீடிப்பு

பழநி கோயிலில் செல்போன் தடை நீடிப்பு
Updated on: 
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நீதிமன்ற உத்தரவுப் படி, கடந்த 2023 அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று முதல் கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை அறநிலையத்துறை தளர்த்தியுள்ளது.

இருப்பினும், பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை தொடரும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பழநி கோயில் இணை ஆணையர் (பொ) வெங்கடேஷிடம் கேட்டபோது, தற்போது வரை அறநிலையத்துறை சார்பில் செல்போன் தடை நீக்கம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறினார்.

பழநி கோயிலில் செல்போன் தடை நீடிப்பு
ஹோப் சதம்: இந்தியாவை 24 ரன்களில் வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள் | 4-வது டி20 ஆட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in