கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நிறைவு

கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நிறைவு
Updated on
1 min read

சென்னை: டெல்லி தலைமை அலு​வல​கத்​தில் 3 நாட்​களாக தவெக நிர்​வாகி​களிடம் நடை​பெற்று வந்த சிபிஐ விசா​ரணை நிறைவடைந்​தது.

கரூர் உயிரிழப்பு சம்​பவம் தொடர்​பான விசா​ரணைக்காக தவெக பொதுச்​செய​லா​ளர் ஆனந்த், நிர்​வாகி​கள் ஆதவ் அர்​ஜூ​னா, சிடிஆர்​.நிர்​மல்​கு​மார், கரூர் மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன் ஆகியோர் டெல்​லி​யில் சிபிஐ அலு​வல​கத்​தில் 29-ம் தேதி ஆஜராகினர். அவர்​களிடம் தனித்​தனி​யாக கரூர் சம்​பவம் தொடர்​பாக அடுக்​கடுக்​கான கேள்வி​களை சிபிஐ அதி​காரி​கள் எழுப்​பினர்.

அவர்​கள் அளித்த பதில்களை வீடியோவாகவும்எழுத்​துப்பூர்​வ​மாக​வும் பதிவுசெய்து கொண்​டனர். அந்​தவகை​யில், தொடர்ந்து 3 நாட்​களாக நடை​பெற்று வந்தவிசா​ரணை நேற்று நிறைவடைந்​தது. பின்னர் சிடிஆர்.நிர்​மல்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எங்​கள் தரப்​பில் அனைத்து வித​மான விளக்​கங்​களை​யும் கொடுத்​திருக்​கிறோம். தேவைப்​படும் பட்​சத்​தில், மேலும் விளக்​கங்​களைக் கேட்​டாலும், எப்​போது வேண்​டு​மா​னாலும் விசா​ரணைக்கு ஒத்​துழைக்க தயா​ராக இருக்​கிறோம் என்​பதை கூறி​யிருக்​கிறோம்.

உள்ளே நடந்த விசா​ரணை சம்​பந்​த​மாக பொது​வெளி​யில் சொல்​வது சரி​யாக இருக்​காது. எங்கள் தரப்பில் என்​னென்ன நியாயங்​கள் இருக்​கிறது, தமிழக அரசும் காவல்​துறையும் எங்கு தவறு செய்​தது என பல்​வேறு விஷ​யங்​களை தெரி​வித்​திருக்​கிறோம்.

நிறைய வீடியோ ஆதா​ரங்களையும் வழங்​கியுள்ளோம் விஜய்க்கு சம்​மன் அனுப்பவாய்ப்பு என்​பது போன்ற தவறான தகவல்​கள் பரப்​பப்​படுகின்​றன. எல்​லா​வற்​றை​யும் சட்​டப்​பூர்​வ​மாக எதிர்​கொள்​வோம்​.

கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நிறைவு
“தவெக தலைமையில் விரைவில் மெகா கூட்டணி” - அருண்ராஜ் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in