அனுமதியின்றி ரோடு ஷோ நடத்திய விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

அனுமதியின்றி ரோடு ஷோ நடத்திய விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக தலை​வர் நடிகர் விஜய் தமிழகம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

அதன்​படி, நேற்று முன்தினம் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்​பூர் தொகு​தி​யில் சாலை வலம் (ரோடுஷோ) வந்​தார். நந்​தனம் சிஐடி நகரிலிருந்து ரோடு ஷோ தொடங்கிய அவர் தொகுதி வேட்​பாளர் என்​.ஆனந்​துடன் பிரச்​சார வாக​னத்​தில் வலம் வந்​தார்.

தொடர்ந்து அவர் தி.நகரில் அன்​பழகன் மேம்​பாலம், வடக்கு உஸ்​மான் சாலை, பசுல்லா சாலை வழி​யாக ஆயிரம் விளக்கு தொகு​திக்​குள் நுழைந்து வாக​னத்​தில் நின்​ற​வாறு கையசைத்து பிரச்​சா​ரம் செய்​தார்.

அதைத் தொடர்ந்து வள்​ளுவர் கோட்​டம் வழி​யாக எழும்​பூர் தொகு​திக்கு சென்று ரோடு ஷோ நடத்​தி​னார். பின்​னர் பூந்​தமல்லி நெடுஞ்​சாலை வழி​யாக வாக​னத்​தில் சென்​ற​வாறு வாக்கு சேகரித்​தார்.

பல ஆயிரக்​கணக்​கான மக்​கள் சாலை​யின் இரு​புற​மும் நின்று விஜய்க்கு ஆதரவு தெரி​வித்​தனர். விஜய் பிரச்​சா​ரத்தை முன்​னிட்டு அவர் செல்​லும் வழி முழு​வதும் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டு, போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டது.

விஜய்க்கு 3 இடங்​களில் பேச மட்​டுமே அனு​மதி வழங்​கிய நிலை​யில், அவர் பேசாமல் அனு​ம​தி​யின்றி (தடையை மீறி) ரோடு ஷோ நடத்​தி​னார்.

இதையடுத்​து, அனு​ம​தி​யின்றி ரோடு ஷோ நடத்​திய நடிகர் விஜய் மற்​றும் கட்சி நிர்​வாகி​களான தி.நகர் தவெக வேட்​பாளர் என்​.ஆனந்த் மற்​றும் சென்னை மாவட்​டச் செய​லா​ளர் அப்​புனு ஆகியோர் மீது தேர்​தல் விதி​களை மீறிய​தாக மாம்​பலம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

தேர்​தல் அதி​காரி சந்​தோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

நிபந்​தனை​களை மீறி கூட்​டம் கூட்​டியது, அனு​ம​திக்​கப்​பட்ட நிகழ்​வுக்கு பதிலாக ரோடு ஷோ நடத்​தி​யது, பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தி​யது ஆகிய 3 பிரிவு​களின் கீழ் இந்த வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்​ப​து குறிப்பிடத்தக்கது.

அனுமதியின்றி ரோடு ஷோ நடத்திய விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
காதல் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in