நில அபகரிப்பில் ஈடுபட முயன்றதாக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்கு பதிவு

நில அபகரிப்பில் ஈடுபட முயன்றதாக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

சென்னை: ஆலந்​தூரில் உள்ள தனி​யார் நிலத்தை சட்​ட​விரோத​மாக ஆக்​கிரமித்​து, நில அபகரிப்​பில் ஈடுபட முயன்​ற​தாக திமுக முன்​னாள் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரிக்கின்​றனர். தமிழகத்​தில் தமிழக வெற்​றிக்​கழகம் ஆட்​சிப்​பொறுப்​பேற்​றது முதல் திமுக முன்​னாள் அமைச்​சர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் மீது அவ்​வப்​போது புகார்​கள் வரு​கின்​றன.

காவல்​துறை​யும் அந்த புகார்​கள் தொடர்​பான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றனர். முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்​புத்​துறை வழக்​கு, செந்​தில் பாலாஜி மீது குதிரை பேர வழக்​கு, மாவட்ட செய​லா​ளர் சிற்​றரசு உள்​ளிட்​டோர் மீது மோசடி புகார் என திமுக​வினர் மீது புகார்​கள் வந்த வண்​ணம் உள்​ளன. இந்​நிலை​யில் முன்​னாள் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை தியாக​ராய நகர் பகு​தியை சேர்ந்த ராஜேஷ் சோமசுந்​தரம் என்​பவர் கடந்த 26-ம் தேதி முதலமைச்​சர் தனிப்​பிரி​வில் திமுக முன்​னாள் அமைச்​சர் தா.​மோ.அன்​பரசன், அவரது உதவி​யாளர் ஜெய்​சங்​கர் மற்​றும் தற்​போது திருப்​போரூர் தாசில்​தா​ராக பணி​யாற்றி வரும் ஆறு​முகம் ஆகியோர் மீது நில மோசடி புகார் அளித்​துள்​ளார்.

அதில் சென்னை ஆலந்​தூர் வடக்கு பரேடு சாலை​யில் தனக்கு சொந்​த​மாக 5,500 சதுர அடி​யில் நிலம் உள்​ள​தாக தெரி​வித்​துள்​ளார். இந்​நிலை​யில், கடந்த 2024 ஆண்டு நடை​பெற்ற நாடாளு​மன்ற தேர்​தலின்போது திமுக முன்​னாள் அமைச்​சர் தா.மோ.அன்​பரசனின் உதவி​யாளர் ஜெய்​சங்​கர் அறி​வுறுத்​தலின் பேரில் தேர்​தல் பணிமனை அமைப்​ப​தற்​காக குன்​றத்​தூரை சேர்ந்த உலக​நாதன் என்​பவருக்கு ஆறு மாத காலம் குத்​தகைக்கு கொடுத்​துள்​ளார்.

ஆனால் குத்​தகை காலம் முடிந்​தும் கடந்த இரு ஆண்​டு​களாக இடத்​தை​யும் திருப்பி கொடுக்​காமல் வாடகையும் தராமல் இடத்தை ஆக்​கிரமிப்பு செய்து வைத்​துள்​ள​தாக புகாரில் குறிப்​பிட்​டுள்​ளார்.

பின்​னர் சம்​பந்​தப்​பட்ட நபர்​களை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்​கள் போலி அடை​யாள ஆவணங்​களை கொடுத்து ஏமாற்​றியது தெரிய வந்​த​தாக புகாரில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் திமுக முன்​னாள் அமைச்​சர் தா.மோ.அன்​பரசனை நேரில் சந்​தித்து புகார் தெரி​வித்தபோது அவர் ஒரு வாரத்​துக்​குள் நிலத்தை தன்​னிடம் கொடுத்​து​ விடும்படி​யும் அதற்​குண்​டான பணத்தை தரு​வ​தாகவும் கூறி​னார்.

ஆனால் நான் நிலத்தை விற்க மாட்​டேன் என கூறி​விட்​டேன். எனவே தனக்கு சொந்​த​மான நிலத்தை மீட்டு சம்பந்​தப்​பட்ட நபர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று புகாரில் தெரி​வித்​துள்​ளார்.

மேலும் ராஜேஷ் சோமசுந்​தரம் இது குறித்து பரங்​கிமலை துணை ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளார். இதன்பேரில் பரங்​கிமலை போலீ​ஸார்​ வழக்கு பதிவு செய்து வி​சா​ரணை மேற்​கொண்​டு வரு​கின்​றனர்​.

நில அபகரிப்பில் ஈடுபட முயன்றதாக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்கு பதிவு
குதிரை பேர விவகாரத்தில் தவெக அரசின் நடவடிக்கை குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்: திமுக மீண்டும் புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in