சென்னை | 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை | 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
Updated on
1 min read

சென்னை: 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்கு விசா​ரணையை செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​திலிருந்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்​றம் செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் தனி​யார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை பக்​கத்து வீட்​டில் வசித்த சிறு​வன் உள்​ளிட்​டோர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக 6 சிறார்​கள் உட்பட 15 பேர் மீது போலீ​ஸார் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இது தொடர்​பாக 6 சிறார் மீதான வழக்கு செங்​கல்​பட்டு சிறார் நீதி​மன்​றத்​தி​லும், எஞ்​சிய 9 பேர் மீதான வழக்கு செங்​கல்​பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தி​லும் விசா​ரணை​யில் இருந்து வந்த நிலை​யில் செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் வழக்கு விசா​ரணையை சென்​னைக்கு மாற்​றக்​கோரி பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் தந்தை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில், “தனது மகள் சென்​னை​யில் படித்து வரு​வ​தா​லும், செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் சாட்​சி​யம் அளிப்​ப​தற்கு சாதக​மான சூழல் இல்லை என்​ப​தா​லும் இந்த வழக்கை சென்னை நீதி​மன்​றத்​துக்கு மாற்ற வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார், பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் தந்தை விடுத்த கோரிக்​கையை ஏற்று 6 சிறார்​களுக்கு எதி​ராக செங்​கல்​பட்டு சிறார் நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்​கை​யும், 9 பேருக்கு எதி​ராக செங்​கல்​பட்டு போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்​கை​யும் சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்றி உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை | 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவு விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in