திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக கொடி கட்டியவர்கள் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக கொடி கட்டியவர்கள் மீது வழக்கு
Updated on
1 min read

மதுரை: உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியதை அடுத்​து, திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள கல்​லத்தி மரத்​தில் தர்கா சந்தனக்கூடு விழா கொடியை கட்​டியது தொடர்​பாக அடையாளம் தெரியாத சிலர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​று​மாறு உயர் நீமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் உத்​தர​விட்​டார். ஆனால், அந்த உத்​தரவை மாவட்ட நிர்​வாகம் நிறைவேற்​ற​வில்​லை. இது தொடர்​பாக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது.

இதனிடையே, மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றலாம் என தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு செல்​லும் என 2 நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது. இந்​நிலை​யில், நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், “நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் முறை​யாக பதில் அளிக்​கா​விட்​டால், மாவட்ட ஆட்​சி​யர், காவல் ஆணை​யர் மீது குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​படும்” என்று நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டார்.

மேலும், கோயிலுக்​குச் சொந்​த​மான இடத்​தில் உள்ள கல்​லத்தி மரத்​தில் தர்கா தரப்​பில் சந்​தனக்​கூடு கொடியேற்ற எப்​படி அனு​மதி வழங்​கப்​பட்​டது? கொடியேற்​றிய​வர்​கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்​லை? என்று கோயில் நிர்​வாகத்​திடம் கேள்வி எழுப்​பி​னார்.

இதற்கு பதில் அளித்த கோயில் நிர்​வாகம், கல்​லத்தி மரத்​தில் கொடி கட்​டிய​வர்​கள் மீது போலீ​ஸில் புகார் அளிக்​கப்​படும் என தெரி​வித்​தது.

அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு திருப்​பரங்​குன்​றம் கோயில் உள்​துறைக் கண்​காணிப்​பாளர் ஜெ.சத்​தி​யசீலன், போலீ​ஸில் புகார் அளித்​தார்.

அதில், “டிச.21-ம் தேதி இரவு கோயிலுக்​குச் சொந்​த​மான இடத்​தில் அத்​து​மீறி பிர​வேசித்​து, கோயில் மலை உச்​சி​யில் உள்ள தல விருட்​ச​மாகிய கல்​லத்தி மரத்​தில், தர்​கா​வின் சந்​தனக்​கூடு திருவிழா கொடியை கட்​டியது சட்​ட​விரோதம். இதில் ஈடு​பட்​ட​வர்​களைக் கண்​டறிந்​து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​திருந்​தார்.

அதன் பேரில், அடை​யாளம் தெரி​யாத சிலர் மீது பல்​வேறு பிரிவு​களில் வழக்​குப் பதிவு செய்​து, திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர்​.

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக கொடி கட்டியவர்கள் மீது வழக்கு
சனாதனம் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகின்றனர்: தமிழக அமைச்சர்கள் மீது நிதின் நபின் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in