கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த தகவல் வெளியிட கோரி வழக்கு

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த தகவல் வெளியிட கோரி வழக்கு
Updated on: 
1 min read

சென்னை: கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் ஜி.தேவராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்.9 அன்று அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்து அலுவல் ரீதியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அவரது தனிப்பட்ட அந்தரங்க உரிமை, கண்ணியம், தனிநபர் ரகசியம் தொடர்பான மருத்துவ விவரங்களை வெளியிடும்படி கோரவில்லை. அதேநேரம், தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் அவரது உடல்நிலை குறித்த தகவல்ளைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது.

மருத்துவச் சிகிச்சையில் உள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிட கோரி கடந்த நவ.5 மற்றும் நவ.12 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் கொளத்தூர் தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கவும் நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்த தகவல் வெளியிட கோரி வழக்கு
“சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட தவெகவினரை கைது செய்க” - அன்புமணி ராமதாஸ்

X