இபிஎஸ் மீது விசாரணை கோரி வழக்கு: வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு

இபிஎஸ்

இபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: ‘​முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, தனது வேட்​புமனு​வில் சொத்து விவரங்​களை மறைத்​துள்​ளார். எனவே வரு​மான வரித்​துறை விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக எடப்​பாடி தொகுதி வாக்​காள​ரான சக்​திவேல் பெரு​மாள், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சேலம் மாவட்​டம் எடப்​பாடி தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி, அத்​தொகு​தி​யில் வெற்றி பெற்று எம்​எல்​ஏ-​வாகதேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். அவர் தனது வேட்​புமனு​வில் சொத்து விவரங்​களை முழு​மை​யாக தெரிவிக்​காமல் மறைத் துள்​ளார். பல்​வேறு தனி​யார் நிறு​வனங்​களில் இருந்து அவரது மனை​விக்கு கிடைக்​கும் வருமானம் குறித்த தகவல்​களை வேட்​புமனு​வில் தெரிவிக்​க​வில்​லை.

கடந்த 2021 தேர்​தலின்​போது இந்து கூட்டு குடும்ப சொத்​தாக 3 ஆயிரத்து 900 சதுரஅடி வீடு இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். ஆனால் அந்த சொத்து தனது மனை​வி​யின் பெயரில் மாற்​றப்​பட்​டதை தற்​போதைய வேட்​புமனு​வில் தெரிவிக்​காமல் மறைத்​துள்​ளார். நெடுங்​குளம் கிராமத்​தில் விவ​சாய நிலத்தை வாங்​கியதற்​கான நிதி ஆதா​ரங்​களும் குறிப்​பிடப்​பட​வில்​லை.

அவர் கடந்த 2021 மற்​றும் 2026-ம் ஆண்​டு​களில் தாக்​கல் செய்​துள்ள வேட்​புமனுக்​களை ஒப்​பிட்​டுப்​பார்த்​தாலே பல்​வேறு குளறு​படிகள் மற்​றும் வெளிப்​படைத்​தன்மை இல்​லாதது தெரிய வரும். எனவே சொத்து விவரம் குறித்த உண்​மைத் தகவல்​களை வேட்​புமனு​வில் மறைத்​துள்​ளது குறித்து வரு​மான வரித்​துறை விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. மனு விரை​வில்வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

<div class="paragraphs"><p>இபிஎஸ் </p></div>
முதல்வர் விஜய் கவனத்துக்கு... சாதாரண மக்களின் அசாதாரண 7 கேள்விகள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in