தாம்பரத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

தாம்பரத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​போலி ஆவணங்​கள் மூலம் தாம்​பரம் அகரம்​தென் கிராமத்​தில் ரூ.300 கோடி மதிப்​புள்ள அரசு புறம்​போக்கு நிலங்​கள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

நில மோசடி​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது ஒரு வாரத்​துக்​குள் அரசு நடவடிக்கை எடுக்​கா​விட்​டால், சிபிஐ வி​சா​ரணைக்கு உத்​தர​விட நேரிடும் என்று நீதி​மன்​றம் எச்​சரித்​துள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் தாம்​பரம் அகரம்​தென் கிராமத்​தில் சுமார் ரூ.300 கோடி மதிப்​புள்ள அரசு புறம்​போக்கு நிலங்​களை ஆக்​கிரமித்​துள்​ளவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சந்​தானம் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

‘அகரம்​தென் ஊராட்​சிமன்​றத் தலை​வர் மற்​றும் அரசி​யல் செல்​வாக்கு உள்ள சிலர் இணைந்து போலி​யான வாரிசு சான்​று, இறப்​புச் சான்​றிதழ்​கள், போலி​யான பட்​டாக்​களை உரு​வாக்கி அரசு நிலத்தை ஆக்​கிரமித்​துள்​ளனர்.

தேர்​தலுக்கு நிதி

இவ்​வாறு ஆக்​கிரமித்​துள்ள நிலங்​கள் மீது ரூ.3 கோடி வரை வங்​கி​களில் கடன் பெற்று தேர்​தலுக்கு நிதி வழங்கி மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். வரு​வாய்த் துறை, பதிவுத் துறை அதி​காரி​களின் துணை​யோடு நடை​பெற்ற இந்த நில மோசடி குறித்து லஞ்ச ஒழிப்​புத் துறை மற்​றும் தாம்​பரம் காவல் ஆணை​யர் தகுந்த வி​சா​ரணை நடத்​தி, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும்’ என்று மனு​வில் அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

நீதிபதி கிருஷ்ணன் ராம​சாமி முன்பு இந்த மனு வி​சா​ரணைக்கு வந்​தது அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், ‘‘இந்த நில மோசடி​யில் தி​முக முன்​னாள் அமைச்​சரின் சகோ​தரி, மற்​றும் அரசி​யல் செல்​வாக்கு மிக்​கவர்​களின் தொடர்பு இருப்​ப​தால் காவல் துறை இது​வரை நடவடிக்கை எடுக்​க​வில்​லை’’ என்று வா​திடப்​பட்​டது.

தவறி​னால் சிபிஐ வி​சா​ரணை

இதையடுத்து நீதிப​தி, அரசு நில மோசடி​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அரசுக்கு உத்​தர​விட்​டார். நடவடிக்கை எடுக்க தவறி​னால் சிபிஐ வி​சா​ரிக்க உத்​தர​விட நேரிடும் என எச்​சரித்து வழக்​கின் வி​சா​ரணை​யை அடுத்​த வாரத்​துக்​கு தள்​ளி​வைத்​​தார்​.

தாம்பரத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
தடை மனுவையும் மீறி அரசு நிலம் பத்திரப் பதிவு? - கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in