திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக வழக்கு: பாஜக பிரமுகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக வழக்கு: பாஜக பிரமுகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை
Updated on
1 min read

சென்னை: தி​முக​வுக்கு எதி​ரான கருத்​துக்​களை தெரி​வித்​த​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் பாஜக மாநில இளைஞரணி நிர்​வாகி எஸ்​.ஜி.சூர்யா மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சேலம் கோட்டை மைதானத்​தில் கடந்த பிப்​.10 அன்று பாஜக சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது. அதில் பங்​கேற்று பேசிய பாஜக மாநில இளைஞரணி நிர்​வாகி​யான எஸ்​.ஜி.சூர்​யா, திமுக​வின் நான்​கரை ஆண்​டு​கால ஆட்சி காலத்​தில் தமிழகத்​தில் மொத்​தம் 34 ஆயிரத்து 497 பள்ளி மாணவி​கள் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இத்​தகைய குற்​றங்​களில் ஈடு​படும் திமுக நிர்​வாகி​கள் மீது போலீ​ஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுப்​ப​தில்லை என்​றும் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

அவருடைய இந்த பேச்சு பொது அமை​திக்கு குந்​தகம் விளைவிக்​கும் நோக்​கிலும், திமுகவை அவம​திக்​கும் நோக்​கிலும் இருப்​ப​தாகக்​கூறி திமுகவைச் சேர்ந்த சிவக்​கு​மார் என்​பவர் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் சேலம் நகர் போலீ​ஸார் பாஜக நிர்​வாகி​யான எஸ்​.ஜி.சூர்யா மீது வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

தனக்கு எதி​ரான இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி எஸ்​.ஜி.சூர்யா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார், இந்த வழக்​கில் சேலம் போலீ​ஸார் வரும் ஏப்​.16-ம் தேதிக்​குள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​தார். அது​வரை மனு​தா​ர​ரான எஸ்​.ஜி.சூர்யா மீது போலீ​ஸார் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கக்​கூ​டாது என அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக வழக்கு: பாஜக பிரமுகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை
தூசு, துகள் மாசுபாடுதான் அதிக மூடுபனிக்கு காரணம்: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in