தூசு, துகள் மாசுபாடுதான் அதிக மூடுபனிக்கு காரணம்: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வில் தகவல்

தூசு, துகள் மாசுபாடுதான் அதிக மூடுபனிக்கு காரணம்: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வில் தகவல்
Updated on
1 min read

சென்னை: வட இந்​தி​யா​வில் குளிர்​கால மூடு​பனி அதி​க​மாக இருப்​ப​தற்கு காற்​றின் தூசு, துகள் மாசு​பாடு தான் காரணம் என்​பது சென்னை ஐஐடி விஞ்​ஞானிகள் தலை​மையி​லான சர்​வ​தேச ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: வட இந்​தி​யா​வில் நில​வும் மாசு​பாடு குறித்து சென்னை ஐஐடி சிவில் இன்​ஜினீயரிங் துறை இணை பேராசிரியர் சந்​தன் சாரங்​கி, ஆராய்ச்​சி​யாளர் என்​.அருண், சைப்​ரஸ் இன்​ஸ்​டிடியூட்​டின் விஜய் பி.க​ன​வாடே, அமெரிக்க சுற்​றுச்​சூழல் நிபுணர் ரித்​தேஷ் கவுதம், அமெரிக்​கா​வின் பசிபிக் நார்த்​வெஸ்ட் தேசிய ஆய்​வகத்​தைச் சேர்ந்த யுன் கியான், இந்​தி​யா​வின் பென்​னட் பல்​கலைக்​கழகத்​தைத் சேர்ந்த மனோஜ் கே.சிங் ஆகியோர் ஆய்வு மேற்​கொண்​டனர்.

ஐஐடி பேராசிரியர்​கள் தலை​மை​யில் இந்த சர்​வ​தேச ஆய்வு நடை​பெற்​றது. இதில், வட இந்​தி​யா​வில் குளிர்​கால மூடு​பனி அதி​க​மாக​வும், அடர்த்​தி​யாக​வும் இருப்​ப​தற்கு காற்​றில் உள்ள தூசு, துகள் மாசு​பாடு​தான் காரணம் என்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. மாசடைந்த காற்று இரவு நேரங்​களில் ஈரப்​ப​தத்தை தக்​க​வைத்​து, நீராவி சுருங்​குதலை விரைவுபடுத்​து​வதுடன் அடர்த்​தி​யான மூடு​பனியை நீண்ட நேரம் நீடிக்​கச் செய்​கிறது என்று தெரிய​வந்​துள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ஆய்வு முடிவு​கள் குறித்து ஆராய்ச்​சி​யாளர்​கள் கூறிய​தாவது: ஐஐடி ஆராய்ச்​சி​யாளர் அருண்: மூடு​பனி அடுக்கு தொடர்ந்து நீடித்​தால், நிலப்​பரப்​பின் சூரிய வெப்​பம் மேலும் குறை​யும். இது, அடுத்த நாள் இரவிலும் நீராவி சுருங்​கு​வதற்கு சாதக​மான சூழலை உரு​வாக்​கும். இது​வரை, மூடு​பனி அதி​க​மாக இருப்​ப​தற்கு புவி வெப்​பமடைதலுடன் தொடர்​புடைய காலநிலை மாற்​றங்​களே காரணம் என விஞ்​ஞானிகள் நம்​பினர். எனினும், மூடு​பனி நிகழ்​வு​களை அதி​கரிக்​கச் செய்​வ​தில் காற்று மாசு​பாடு முக்​கிய பங்கு வகிப்​பது எங்​கள் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

பேராசிரியர் சந்​தன் சாரங்​கி: மூடு​பனி​யின் அடர்த்​தி, கால அளவு ஆகிய​வற்றை மாசு​பாடு எவ்​வாறு பாதிக்​கிறது என்​பது குறித்த சிறந்த புரிதலை எங்​களது ஆய்​வுத் தரவு​கள் தெளி​வாக வழங்​கு​கின்​றன. மூடு​பனி குறித்த முன்​னறி​விப்​பு​களை மேம்​படுத்​த​வும், பாது​காப்​பான விமானப் போக்​கு​வரத்​துக்​குத் தேவை​யான சிறந்த முடிவு​களை விமான நிலை​யங்​கள் முன்​கூட்​டியே எடுக்​க​வும் இந்த ஆய்​வுத் தகவல்​கள் உறு​துணை​யாக இருக்​கும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

தூசு, துகள் மாசுபாடுதான் அதிக மூடுபனிக்கு காரணம்: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வில் தகவல்
மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரும் விவ​காரம்: ராம​தாஸ் மனு மீது 3 நாட்​களில் தீர்ப்​பளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in